லியோ பட ரிலீஸில் சிக்கல்..! - ரசிகர்கள் அதிர்ச்சி..!

 

அட, இந்தியாவிற்குள் தானே கர்நாடகாவும் தமிழகமும் இருக்கிறது. இதையெல்லாம் மறந்து எப்படி வன்மமாக நடந்து கொள்வது முறைதானா? என்று கேட்கக் கூடிய அளவிற்கு கர்நாடகாவில் இருக்கும் நீரை தமிழர்களுக்கு கொடுப்பதில் பாரபட்சம் பார்த்து வருகிறார்கள். 

அதுமட்டுமல்லாமல் தமிழ் திரைப்படங்களை அங்கு திரையிட விடாமல் பல்வேறு பிரச்சனைகளில் கன்னட வெறியர்கள் அரங்கேற்றி வரும் நிகழ்வுகளை பார்த்து இயக்குனரும், நடிகரும் அரசியல்வாதியுமான சீமான் தனது கருத்துக்களை ஆவேசமாக கூறியிருக்கிறார். 

அதுவும் எதற்கு தெரியுமா? விஜய் படத்துக்கு கன்னட தேசத்தில் திரையிட விடாமல் தடை விதிப்பதா? அது போல நாங்களும் கேஜிஎப் போன்ற படங்களுக்கு தடை விதித்தால் என்ன நடக்கும் என தெரியாதா? என கேள்வியை எழுப்பி இருக்கிறார். 

ஏற்கனவே கர்நாடகாவில் சித்தா பட பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழரான சித்தார்த்தை கன்னட ரக்ஷா வேதிகா அமைப்பினர், நடிகர் சித்தார்த்தை பேசவிடாமல் தடுத்து அரங்கத்தில் இருந்து வெளியேற்றிய நிகழ்வு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. 

அந்த நிகழ்வு அடங்கி முடிவதற்குள் நடிகர் தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படத்தை திரையிட விடாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட போவதாக செய்திகள் பரவி வந்த வேளையில், அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் தமிழ்நாட்டில் சுதீப் நடித்திருக்கிறார் தம்பி யாஷ் நடித்த கேஜிஎப் பகுதி இரண்டு வந்தது இவற்றுக்கெல்லாம் யாரும் எந்த இடையூறும் செய்யவில்லை. 

எனவே தளபதி விஜய் படத்தையோ அல்லது வேறு தமிழ் நடிகர்களின் திரைப்படத்தை திரையிட விடாமல் தடுப்பது எந்த விதத்தில் நியாயம். தண்ணீர் பிரச்சனைக்கும் நடிகர்களுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. எந்த நடிகர்களும் காவிரி தண்ணீரை கொடுங்கள் என்று கேட்கவே இல்லை. 

அது அரசியல் தலைவர்கள் பார்த்து பேசி தீர்த்துக் கொள்வார்கள். அதை விடுத்து தமிழ் நடிகர்களின் படங்களையோ, தமிழ் நடிகர்களை அவதூறாக நடத்தும் பட்சத்தில் நான் பார்த்து சும்மா இருக்க மாட்டேன். எங்களை இன வெறியர்கள் என்று அழைக்கும் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் உங்களின் பெயர் என்ன?..

சீன நடிகர் நடிக்க வந்தாலோ அல்லது ஒரு வெளிநாட்டு நடிகர் நடிக்க வந்தாலோ அதை வரவேற்பதோடு உலக சந்தையாக இந்தியாவை மாற்றி இருப்பதில் முக்கிய பங்கு கர்நாடகாவிற்கு உள்ளது. கொரிய படத்தை திரையிட்டு பார்க்க அனுமதி வழங்கக்கூடிய நீங்கள் இந்தியாவில் இருக்கும் தமிழரின் தமிழ் படத்தை திரையிட மறுப்பது ஏன்.

உங்கள் படம் எங்கள் மாநிலத்தில் திரையிடும்போது தடுப்பதற்கு எவ்வளவு நேரம் ஆகும். அதெல்லாம் தவறு தேசிய ஒருமைப்பாடு முக்கியம். எனவே இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று எச்சரித்து நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய சப்போட் அளித்திருக்கிறார்.