அது இல்லாம நடிக்க மாட்டீங்களா? ரசிகரின் சர்ச்சை கேள்விக்கு நடிகர் நானி விளக்கம்..!

 


தசரா படத்துக்கு பின் தெலுங்கு நடிகரான நானி நடித்த படம் தான் "Hi நான்னா". இந்தத் திரைப்படத்தில் இவரோடு இணைந்து கதாநாயகி யாக மிருணாள் தாகூர் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் கதையை பொறுத்தவரை தந்தை, மகள் இடையே ஆன பாசத்தை மையமாகக் கொண்டு உருவாக்கி உள்ளது என கூறலாம். 

மேலும் இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் வைரல் ஆகிவிட்டது. இதற்குக் காரணம் இந்த டீசர் வெளிவந்த சில நிமிடங்களிலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பதற்கு நானி மற்றும் மிருணாள் தாகூர் லிப் லாக் காட்சியில் நடித்தது தான். 

இந்த காட்சியை பார்த்து ரசிகர்கள் அனைவரும் உறைந்து விட்டார்கள் என கூறலாம். இந்நிலையில் இந்த படத்தின் பிரமோஷன் பணிகள் தற்போது படு வேகமாக நடந்து வருகிறது. 

இந்த சூழ்நிலையில் தான் நடிகர் நானி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது ரசிகர் அவரிடம் நீங்கள் நடிக்கும் எல்லா படத்திலும் லிப் லாக் காட்சிகள் இடம் பெற்று வருவது ரகசியம் என்ன? அது போன்ற காட்சிகளில் நீங்கள் நடிக்க விருப்பப்படுகிறீர்களா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார். 

இதற்கு நாசுக்காக பதில் அளித்த நானி சமீபத்தில் சுந்தர ராணி, தசரா போன்ற படங்களில் லிப் லாக் காட்சிகள் ஏதும் இல்லை என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் அதற்கு முந்தைய படங்களில் அது போன்ற காட்சிக்கு அவசியம் இருந்ததால்தான் அப்படி நடித்தேன் என்பதை கூறியிருக்கிறார். 

 இதனை அடுத்து இந்த படம் விரைவில் திரைக்கு வரக்கூடிய நிலையில் இந்த படத்தை பார்ப்பதற்காக அனைவரும் ஆவலாக காத்திருக்கிறார்கள். மேலும் இது ஒரு வெற்றி படமாக நானிக்கு அமையுமா? என்பது இனிவரும் நாட்களில் தெரியவரும். 

 இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் வண்ணத்திரை பக்கத்தை நீங்கள் பார்வையிடுவதோடு மட்டுமல்லாமல், உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து எங்களுக்கு உரிய ஆதரவை கொடுக்கவும்.