சந்திரமுகி 2 வரவை எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு படம் ஏமாற்றத்தை தந்ததா? அல்லது குஷியை தந்ததா? என்பது சந்திரமுகி 2 வசூல் செய்திருக்கும் தொகையைப் பார்த்தாலே தெரிந்து விடும் எனக் கூறலாம்.
அந்த வகையில் மாபெரும் எதிர்பார்ப்போடு பி வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி முதல் பாகம் மாபெரும் வெற்றியடைந்தது அனைவருக்கும் தெரியும்.
அதே போல் தற்போது இதன் இரண்டாவது பாகம் சமீபத்தில் திரை அரங்குகளில் வெளிவந்து ரஜினிகாந்த்க்கு பதிலாக வேட்டையன் கேரக்டரை ராகவா லாரன்ஸ் நடிக்க, ஜோதிகா கேரக்டரை கங்கனா ராணாவத் நடித்திருந்தார்.
மேலும் நகைச்சுவை நடிகர் வடிவேலு முதலில் நடித்த அதே அதே கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் வெளியாகி 8 நாட்களை கடந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 7 நாட்களில் இந்த படம் மொத்தம் எவ்வளவு ரூபாய் வசூல் செய்துள்ளது என்பதை இனி பார்க்கலாம்.
சந்திரமுகி 2 மொத்தம் ஏழு நாட்களில் உலக அளவில் சுமார் 4.35 கோடியை இந்த படம் வசூல் செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து இந்த படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் மட்டுமல்லாமல் படக்குழுவே படு குஷியில் உள்ளது எனக் கூறலாம்.
இதை அடுத்து வேட்டையன் வேட்டையை ஆரம்பித்து விட்டான் என ரசிகர்கள் ஏகோபித்த குரல்களில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
நீங்களும் சந்திரமுகி 2 இன்னும் பார்க்கவில்லை என்றால் குடும்பத்தோடு சென்று போய் குதூகலமாய் பார்க்கலாமே.