பூவே உனக்காக திரைப்படத்தின் மூலம் தனது அற்புத நடிப்பாற்றலை வெளிப்படுத்திய நடிகர் விஜய்க்கு இந்தப் படம் ஒரு மாபெரும் திருப்புமுனையாய் அமைந்தது எனக் கூறலாம்.
இதனை அடுத்து இவர் நடித்த படங்கள் சூப்பர் டூப்பர் கிட்டை கொடுத்து தமிழ் திரை உலகில் அசைக்க முடியாத நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றதோடு இவரது படங்களை பார்ப்பதற்கு என்று ரசிகர்களின் படை அதிகரித்தது.
எனினும் நடிகர் விஜய் நடித்த படங்கள் வெளிவரக்கூடிய சமயங்களில் பிரச்சனைகளை சந்தித்த வண்ணம் இருந்தது. அந்தப் பிரச்சனை லியோ படத்தில் எழுந்ததும் உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.
விஜய் நடித்த படங்கள் பலவிதமான போராட்டங்களை சந்தித்த பிறகே திரைக்கு வந்து வெற்றியை சூட கூடிய நிலையில் லியோ படம் வெளிவர ஆரம்பித்தது முதல் இப்போது வரை பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.
ஏற்கனவே பீஸ்ட், வாரிசு தராத வெற்றியை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவரும் லியோ கட்டாயம் கொடுத்து தளபதி விஜய்க்கு மிகச்சிறந்த படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட லியோ திரைப்படம் பலர் மத்தியிலும் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இதற்குக் காரணம் இந்த படத்தில் விஜய் சிகரெட் பிடிப்பது, வன்முறையான காட்சிகள், கெட்ட வார்த்தைகள் போன்றவை உள்ளதாகவும், இவை எதிர்கால தலைமுறையை சீரழிக்கும் என்று பலரும் நெகட்டிவ் விமர்சனங்களை பதிவு செய்தனர்.
மேலும் இந்தத் திரைப்படம் திரையரங்குகளுக்கு வெளி வருவதற்கு முன்பே திரையரங்க உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.
இது போலவே லியோ டிரைலரை திரையிடங்களில் வெளியிட்டதால் தியேட்டரையே நாசம் செய்த நிகழ்வும் நடந்துள்ளது.
இப்படி அடுக்கடுக்கான சோதனைகளை லியோ படம் சந்தித்து வருகிறது.
இந்தியாவில் தான் இப்படி எல்லாம் நிகழ்கிறது என்றால் அதையும் தாண்டி அமெரிக்காவில் உள்ள திரையரங்கில் லியோ படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே எதிர்பாராத அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.
அது லியோ திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே உள்ளே புகுந்த விநியோகஸ்தர் கோபத்தில் ஸ்கிரீனை கிழித்திருக்கிறார். இதனால் படத்தைப் பார்த்தவர்கள் பயத்தில் அப்படியே வெளியேறி விட்டார்கள்.
இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் தங்களது தலைவர் படம் எப்போதுதான் பிரச்சனை இல்லாமல் வெளிவரும் என அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.