தென்னிந்திய திரை உலகில் கதாநாயகிகள் பலரும் பட்டப்படிப்பு மட்டுமல்லாமல், மருத்துவ படிப்பு வரை படித்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட கதாநாயகிகளில் யார்? யார்? என்னென்ன படிப்புகளை படித்திருக்கிறார்கள் என்பது பற்றிய லிஸ்ட்டை இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
ஒரு சமயம் இவர்கள் நடிகைகளாக மாறாவிட்டால், அவர்கள் படிப்புக்கு ஏற்ற துறையில் வேலைக்கு கண்டிப்பாக சென்று இருப்பார்கள் எனக் கூறலாம். எனவே இந்த கட்டுரையில் அதிகம் படித்த நடிகைகள் என்னென்ன படிப்பினை படித்திருக்கிறார்கள் என இனி காணலாம்.
தற்போது திரை உலகில் இரண்டாவது இன்னிங்ஸில் அமர்க்களமான வெற்றியைப் பெற்று கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருக்கும் நடிகை திரிஷா பற்றி அதிகமாக உங்களிடம் கூற வேண்டிய அவசியம் இல்லை.
அண்மையில் இவர் நடிப்பில் வெளிவந்த "தி ரோட்" திரைப்படம் மாபெரும் வெற்றி அடைத்தது தொடர்ந்து வரும் 19ஆம் தேதி "லியோ" படம் வெளிவர உள்ளது. இந்தப் படத்திலும் இவர் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.இவர் ஆரம்பத்தில் மாடலிங் துறையில் தனது பணியை ஆரம்பித்தவர், சென்னையில் இருக்கும் எத்திராஜ் கல்லூரியில் பிபிஏ பட்டப் படிப்பை முடித்திருக்கிறார்.
லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று பெயரை பெற்றிருக்கும் நயந்தாரா 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார். தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் இவர் அண்மையில் பாலிவுடிலும் தடம் பதித்து இருக்கிறார்.
பாலிவுட்டில் அண்மையில் இவர் நடிப்பில் வெளிவந்த ஜவான் திரைப்படம் ஆயிரம் கோடி வசூலை கடைந்து சாதனை படைத்து உள்ளது.
திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகப் பணியாற்றிய இவர் ஆங்கிலத்தில் அதாவது இங்கிலீஷ் லிட்ரேச்சர் படித்திருக்கிறார்.
மாஸ்கோவின் காவேரி படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான நடிகை சமந்தா பாலிவுட்டில் சிட்டடெல் என்ற தொடரிலும் நடித்திருக்கிறார்.
இவருக்கு தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய ரசிகர் படையை உள்ளது. சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்பை முடித்திருக்கிறார்.
இன்றைய இளைஞர்களின் க்ரஷ் யார் என்று கேட்டால் உடனடியாக ராஷ்மிகா என்ற பெயரை அனைவரும் உச்சரிப்பார்கள். இவர் கார்த்தியுடன் "சுல்தான்" படத்தில் நடித்ததோடு மட்டுமல்லாமல் விஜயின் "வாரிசு" படத்தில் நடித்து தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்திருக்கக் கூடியவர்.
இவர் பெங்களூருவில் உள்ள கல்லூரியில் ஜர்னலிசம்,சைக்காலஜி மற்றும் இங்கிலீஷ் லிட்ரேச்சர் படித்திருக்கிறார்.
மலையாள நடிகையாக இருந்தாலும் நித்யா மேனன் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நாயகி தமிழில் "நூற்றென்பது" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் விஜய், சூர்யா, துல்கர் சல்மான், தனுஷ் உட்பட்ட பல்வேறு நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்த இவர் பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் ஜர்னலிசம் படிப்பை முடித்திருக்கிறார்.
மலையாளத் திரைப்படமான பிரேமம் திரைப்படத்தில் அறிமுகநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் சக்கை போடு போட்டு தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருக்கும் சாய் பல்லவி பாலிவுட்டில் உருவாக்கி வரும் ராமாயண கதையில் சீதையாக நடித்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
மேலும் இவர் ஜார்ஜியாவில் உள்ள பிரபல மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டப்படிப்பை முடித்திருக்கக்கூடிய தென்னிந்திய நடிகை ஆவார்.
தென்னிந்திய திரை உலகிலேயே அதிகம் படித்தவர் இவர்தான் எனக் கூறப்படுகிறது.
இப்போது உங்களுக்கு மிக நன்றாக தெரிந்து இருக்கும் தென்னிந்திய திரை உலகில் அதிகம் படித்த நடிகை யார் என்பது. இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் உங்கள் நண்பர்களோடு ஷேர் செய்யுங்கள்.