தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் நடித்த நடிகைகளில் ஒருவர் தான் அமலா பால். இவர் தமிழ் திரை உலகை பொருத்தவரை 2010 ஆம் ஆண்டு வெளிவந்த சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுக நாயகியானார்.
இதனை அடுத்து இவர் நடிப்பில் வெளிவந்த மைனா திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை இவருக்கு பெற்று தந்ததோடு இவருக்கு என்று ஒரு ரசிகர் படையை உருவாக்கிக் கொடுத்தது.
ஆனால் அமலாபால் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டது போல, இவருக்கு கிடைத்த அத்தனை புகழையும் தக்க வைத்துக் கொள்ளாமல் கெடுத்துக் கொண்டார்.
மேலும் இவர் தலைவா படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே ஏஎல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இரண்டு வருட திருமண வாழ்க்கையில் கசப்பு ஏற்பட்டதின் காரணமாக விவாகரத்து பெற்றார்.
இந்த விவாகரத்துக்கு பிறகு இவருக்கு சரியான பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை.
எனவே சமூக வலைத்தளங்களில் அத்திரிபுத்திரி புகைப்படங்களை வெளியிட்டு சினிமா வாய்ப்புக்காக காத்திருந்தார். இதனிடையே அடுத்தடுத்து காதல் கசமுசா என பல கிசு கிசுபால் அடிபட்டார்.
ஏற்கனவே அந்த விஷயத்தில் ரொம்ப வீக்காக கருதப்படக் கூடிய அமலா பால் தற்போது தன்னுடைய 32 வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்.
இந்த பிறந்தநாள் பார்ட்டியில் அவருடைய நீண்ட நாள் நண்பர் ஜெகத் தேசாய் கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் அமலாபாலை ப்ரபோஸ் செய்திருக்கிறார்.
இதனை அடுத்து அந்த நண்பரின் காதலை ஏற்றுக் கொள்ளும் விதமாக லிப்லாக் முத்தம் கொடுத்து அசர வைத்திருக்கக் கூடிய வீடியோவை அமலாபால் டேட் செய்து இன்ஸ்டாவில் பதிவிட ரசிகர்கள் அனைவரும் மறுபடியுமா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள்.
இந்த வீடியோவில் வெட்டிங் பேலன்ஸ் என கேப்ஷன் செய்து இருப்பதால், இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று தற்போது திரையுலக வட்டாரங்களில் பேச்சு அடிபட்டு வருகிறது.
ஏற்கனவே 2020 ஆம் ஆண்டு மும்பையில் சேர்ந்த பாடகரை காதலிப்பதாக அறிவித்திருந்தார். அது மட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் லிவ்விங் டூகதார் முறையில் சில காலம் வாழ்ந்தனர். எனினும் அவர்களுக்குள் செட்டாகாததின் காரணத்தால் பிரிந்து விட்டார்கள்.
இந்நிலையில் மீண்டும் அமலா பாலுக்கு ப்ரபோஸ் செய்திருக்கக் கூடிய இவருடனாவது நிம்மதியாக தனது புதிய வாழ்க்கையை தொடர்ந்து நடத்துவாரா?, இல்லை இதுவும் பாதியில் சுழன்று விடுமா? என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருவதோடு திருமண தேதியை எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.