தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்க கூடிய நடிகை தமன்னா ஏற்கனவே ஹிந்தியில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து தற்போது ஹிந்தி படங்களில் நடிப்பதில் அதிக கவனத்தை செலுத்தி வரும் நடிகை தமன்னா முதன் முறையாக மலையாள படத்தில் நடித்திருக்கிறார்.
தற்போது ரசிகர்களின் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கக்கூடிய இந்த மலையாள படமானது இவரது முதல் மலையாள படம் என கூறலாம். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகர் திலீப் நடித்து இருக்கிறார்.
ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு தீலீப் சில வழக்குகளில் சிக்கி இனி மேல் சினிமாவில் இவரை பார்க்க முடியாது என்ற சூழ்நிலை நிலவிய போது, அவர் நடிப்பில் வெளி வந்த ராம் லீலா படம் சூப்பர் டூப்பர் கிட்டை கொடுத்து.
மேலும் 100 கோடிக்கு மேல் வசூலை கொடுத்தது.
இதனை அடுத்து தமன்னாவோடு ஜோடி சேர்ந்து "பந்தரா" என்ற மலையாளத் திரைப்படத்தில் திலீப் நடிக்க, படத்தை இயக்குனர் அருண் கோபி இயக்கியுள்ளார். ஏற்கனவே இந்த இயக்குனர் தான் ராம்லீலா படத்தை எடுத்தவர் என்பதால் இந்த படம் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
அது மட்டுமல்லாமல் ரஜினி நடிப்பில் வெளி வந்த ஜெய்லர் திரைப்படத்தில் காவாலா மூலம் ரசிகர்களை கவர்ந்ததோடு மட்டுமல்லாமல், இந்த பாடல் கேரளாவிலும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டதின் காரணத்தால் தமன்னா நடித்த இந்த மலையாள படத்தின் மீது எதிர்பார்ப்புகள் எகிரி உள்ளது.
இந்தப் படமானது வரும் நவம்பர் 10ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளிவரக்கூடிய சூழலில் தமன்னாவின் இந்த முதல் மலையாள படம் அவருக்கு மாபெரும் வெற்றியை தரக்கூடிய படமாக அமையும் என்று பல்வேறு விதமான பேச்சுக்கள் எழுந்துள்ளது.
தீபாவளி அன்று வெளிவரக்கூடிய இந்த படத்தின் வசூல் எவ்வளவு என்பது தெரிந்தால் தமன்னா காட்டில் கட்டாயம் மழை தான் எனக் கூறலாம். இந்தப் படத்தில் வெற்றியை தொடர்ந்து மலையாளத்தில் அதிக படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கட்டாயம் அவருக்கு கிடைக்கும் என நம்பப்படுகிறது.