திருமணம் என்றாலே இந்தியாவை பொறுத்தவரை படு ஆடம்பரமாக பல வகைகளில் செலவுகள் செய்து விமர்சனமாக நடக்கும் என்பது மிக நன்றாக தெரியும். இதற்கு என பல லட்சங்களை செலவு செய்வார்கள்.
அதுவே நட்சத்திர குடும்பங்களின் திருமணங்கள் என்றால் கேட்கவா வேண்டும்.
அவர்கள் எடுக்கும் உடைகள் மற்றும் அணியக்கூடிய உடைகளின் விலைகளை கேட்டா நீங்கள் அதிர்ந்து விடுவீர்கள்.
அந்த வகையில் ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது திருமணத்தை 20, 2007 அன்று மிகவும் சிறப்பான முறையில் செய்து கொண்டார்கள்.
இவர் திருமணத்து போது அணிந்த ஆடையின் விலை என்ன என்று கேட்டால் உங்களுக்கு பக் என்று ஆகிவிடும்.
திருமணத்தின் போது ஐஸ்வர்யா ராய் அணிந்த ஆடையின் மதிப்பு 75 லட்சம் ரூபாய் ஆகும். இதை நீதா என்ற ஆடை வடிவமைப்பாளர் உருவாக்கி இருக்கிறார். மிகவும் அழகான காஞ்சிபுரம் பட்டுப்புடவை தான் இது தங்கத்தால் ஆன ஜரிகைகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
இவரை அடுத்து ஷில்பா ஷெட்டி தனது திருமணத்திற்காக சுமார் 50 லட்சம் மதிப்பில் உள்ள உடையை அணிந்திருக்கிறார். இதில் 8000 ஸ்வரோவ்ஸ்கி படிகங்களை பதித்திருக்கிறார்கள். பாரம்பரிய சிவப்பு நிற புடவையை இவர் திருமணத்தன்று அணிந்திருக்கிறார்.
மேலும் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் வீராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மா திருமணத்தின் போது அணிந்திருந்த லெகங்காவில் பார்ப்பதற்கு இளவரசி போல காட்சி அளித்து இருந்தார் என்ற திருமண உடையின் மதிப்பு சுமார் 30 லட்சம் ஆகும்.
பிரியங்கா சோப்ரா 2018 ஆம் ஆண்டு பாடகர் நிக் ஜோசனை திருமணம் செய்து கொண்டால் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்தில் சிவப்பு நிற லெஹங்காவை அணிந்திருந்தார். இதன் விலை 13 லட்சம் ஆகும்.
ரன்பீர் கபரின் மனைவி ஆலியா பட் திருமணத்தின் போது அணிந்திருந்த புடவை பலரின் கவனத்தையும் ஈர்த்தது. அது மட்டும் அல்லாமல் இவர் வெளிர் நிற ஆர்கன்சா புடவையை அணிந்திருந்தார். இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது எனக் கூறலாம். இதன் விலை 50 லட்சம் என்று கூறப்படுகிறது.
நமது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணத்தின் போது அணிந்திருந்த சிவப்பு நிற புடவை முழுக்க முழுக்க எம்பிராய்டிங் செய்யப்பட்டது.இது பார்ப்பதற்கு சிம்புளாக இருந்தாலும் இதன் விலை 25 லட்சம் என கூறப்படுகிறது.