தமிழ் திரையுலகை பொருத்த வரை தமிழில் விஜய்யின் பிகில் படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்திருக்கக்கூடிய இந்த நடிகை ஜெயம் ரவி, யோகி பாபு நடித்த கோமாளி படத்தில் ஜெயம் ரவியின் தங்கையாக நடித்திருப்பார்.
இப்போது உங்களுக்கு யார் அந்த நடிகை என்பதை தெரிந்து இருக்கும்.
ஆம் நீங்கள் நினைப்பது போல அந்த நடிகை ஆர் ஜே ஆனந்தி தான். ஆரம்ப நாட்களில் இவர் ஆர் ஜே வாக பணியாற்றிய பிறகு ஒரு சில படங்களில் நடித்து வந்த இவர் சமூக வலைத்தளங்களில் படும் பிஸியாக இருக்கிறார்.
இவரும் மற்ற நடிகைகளை போல சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிடுவதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
இந்த வகையில் சமீபத்தில் வெளி வரும் திரைப்படங்களில் பேசப்படக்கூடிய வார்த்தைகள் அனைத்தும் பெண்களை அசிங்கப்படுத்தக்கூடிய வகையில் இருப்பதாகவும் இது போன்ற வார்த்தைகளை ஏன் சினிமாவில் பேச வேண்டும் என அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் பெண்களைப் பற்றி பேசும் போது அவர்கள் கண்டிப்பாக தனது மார்பகங்களை ஷால் போட்டு மறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருவது மிகவும் தவறான விஷயம் என்று கூறி இருப்பதோடு மட்டுமல்லாமல், அப்படி மூடி வைப்பதால் அது எதற்காக உதவுகிறது என்பதை யாரும் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார்.
மேலும் ஒரு பெண்ணின் உடல் சார்ந்த விஷயத்தை ஒருவர் பார்க்கும் போது தான் அவர்களுக்கு தகுந்த உற்றத் துணையை தேர்ந்தெடுக்க முடியும் எனவே ஒரு வீட்டில் ஒரு பெண் பிரவுசர் போட்டுக் கொண்டிருப்பதை ஒரு பையன் பார்த்தால் வெளியில் பார்க்கும் பெண்ணிடமும் அவளிடம் இருக்கும் தோற்றத்தின் வித்தியாசம் அவனுக்கு எளிதில் விளங்கும் என்று தெரிவித்திருக்கிறார்.
எனவே அவரவர் விருப்பப்படி உடைகளை அணியலாம். ஆனால் அதன்மூலம் எவருக்கும் தீய எண்ணங்கள் ஏற்படாத படி அமைவது மிகவும் நன்மை அளிக்கும் என கூறி இருக்கிறார்.
இதனை அடுத்து இவர் கூறியிருக்கும் எந்த கருத்தானது பலர் மத்தியில் பல வகைகளில் பேசும் பொருளாகிவிட்டது.
இவர் கூறியிருப்பதில் ஏதேனும் தவறு உள்ளதா? அல்லது இது சரிதானா? என்பது போன்ற கருத்துக்கள் தற்போது இணையத்தில் பட்டிமன்றம் போல் நடந்து வருகிறது என கூறலாம்.