80,90-களில் முன்னணி நாயகனாக திகழ்ந்த மைக் மோகன் யாரும் எளிதில் மறந்திட முடியாது. இவரது படத்தில் இடம் பிடித்த பாடல்கள் ரசிகர்களின் மனதில் இன்று வரை நீங்காது ஒலிக்கும் பாடல்களாக உள்ளது.
கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்த மோகன் கன்னட, மலையாள, தெலுங்கு படங்கள் மற்றும் தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழில் இயக்குனர் மகேந்திரன் இயக்கிய கோகிலா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதனை அடுத்து கோகிலா மோகன் என அழைக்கப்பட்டார்.
1980 இல் மூடுபனி என்ற தமிழ் திரைப்படத்தில் இவரது நடிப்பை பார்த்து திரை உலகமே வியந்ததோடு, திரை உலகில் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தார்.
இவர் படங்கள் அனைத்தும் தொடர்ந்து மிகப் பெரிய வெற்றியை கொடுத்ததின் காரணத்தால் இவரை வெள்ளி விழா நாயகன் என்று அனைவரும் அழைத்தார்கள்.
பயணங்கள் முடிவதில்லை என்ற திரைப்படத்தில் இவர் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்ததோடு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை 1982ல் பெற்றிருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் மேடை பாடகராக நடித்ததின் மூலம் மிகவும் பிரபலமானதின் காரணத்தால் மைக் மோகன் என்ற பெயரை பெற்றார்.
இவர் தன் வாழ்நாள் முழுவதும் கதாநாயகனாகவே நடிக்க வேண்டும் என்ற கொள்கையை கொண்டிருந்த காரணத்தால் கதாநாயகனாகவே நடித்தார்.
அந்த வகையில் விதி, நூறாவது நாள், இரட்டைவால் குருவி, சகாதேவன் மகாதேவன் போன்ற படங்கள் இவர் பெயரை இன்றும் சொல்லக் கூடிய படங்களாக உள்ளது.
இதனை அடுத்து இவருக்கு தற்போது தளபதி விஜய்யோடு இணைந்து தளபதி 68 நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த வாய்ப்பை சீராக பயன்படுத்த இவர் தனது கொள்கையை விட்டுக் கொடுத்து இந்த படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார்.
நடித்தால் ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என்பதை வாழ்நாள் கொள்கையாக கொண்டிருந்த மைக் மோகன் தற்போது தளபதி விஜய்க்காக வில்லன் கதாபத்திரத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் நடிப்பதற்காக இதுவரை இவர் நடித்த படத்தில், நடித்ததற்காக பெற்ற சம்பளத்தை விட அதிகமாக இரண்டு கோடி ரூபாய் சம்பளமாக வாங்க இருக்கிறார்.
இதனை அடுத்து மைக் மோகனின் ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருவதோடு இந்த படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்து, மேலும் பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை அள்ளி வழங்கும் என்று முன்கூட்டியே பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.