எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் வெளி வந்த வாலி படம் அஜித்தின் திரைப்பட வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்வதற்கான உரிமையை நடிகர் ஸ்ரீதேவியின் கணவரும் தயாரிப்பாளருமான போனி கபூர் பெற்றிருக்கிறார்.
இதனை எதிர்த்து எஸ்.ஜே சூர்யா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததோடு அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கதை எழுதியவருகே சொந்தம் என்பதற்கான எந்த ஒரு ஆவணத்தையும் எஸ் ஜே சூர்யா வழங்கவில்லை என்றும் படத்தின் காப்புரிமை தயாரிப்பாளருக்கு சொந்தம் எனக் கூறி படத்தின் ஹிந்தி ரீமேக்கை தொடங்க கடந்த 2021 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.
இதனை அடுத்து எஸ் ஜே சூர்யா இந்த வழக்கை மேல்முறையீடு செய்ததின் விளைவாக நீதிபதி எம் ஆர் ராதா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை விசாரணைக்கு வந்தது.
மேலும் இந்த விசாரணையில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி எஸ்.ஜே சூர்யாவின் மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார்.
இதனை அடுத்து தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது எஸ் ஜே சூர்யாவின் சாட்சியத்தை பதிவு செய்ய மாஸ்டர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் பெயரில் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள நான்காவது மாஸ்டர் கோர்ட் நீதிபதி முன் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி ஆஜரான இயக்குனர் எஸ் ஜே சூர்யா இரண்டரை மணி நேரம் சாட்சியம் அளித்தார்.
இதனை அடுத்து குறுக்கு விசாரணை நிறைவடையாத காரணத்தால் வழக்கு தள்ளி வைக்கப்பட்டு மீண்டும் நான்காவது மாஸ்டர் நீதிமன்றத்தின் நீதிபதி கின்ஸ்லி கிறிஸ்டோபர் முன் வழக்கு விசாரணைக்கு வந்தது.
ஆனால் இந்த விசாரணைக்கு எஸ் ஜே சூர்யா ஆஜராகவில்லை.
இதனை அடுத்து எஸ் ஜே சூர்யாவிடம் குறுக்கு விசாரணை செய்ய சென்னை உச்ச நீதிமன்றம் அனுமதி பெற்று வர மாஸ்டர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.
இந்த நிலையில் எஸ் ஜே சூர்யா இந்த வழக்கு நிமித்தமாக அப்சப்ட் ஆகி இருப்பதாக தெரியவந்துள்ளது.