இணையத்தில் தீயாக பரவிய வீடியோ..! - நடிகை ரோஜா மறுப்பு..! - என்ன தான் நடக்குது..?

 


தமிழ் திரை உலகில் சூரியன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் இதயத்தில் கனவு கன்னியாக 90களின் காலகட்டத்தில் திகழ்ந்த நடிகை ரோஜா இயக்குனர் செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சினிமா துறையில் கல்லா கட்டிய இவர் அரசியலை விட்டு வைக்கவில்லை. 

மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஆந்திர அரசியலில் ஈடுபட்டு வரும் இவர் அமைச்சராகவும் தற்போது விளங்குகிறார். அந்த வகையில் இவரைப் பற்றி தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் விவகாரமான பேச்சினை பேசியதை அடுத்து அவருக்கு பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் ரோஜா கண்ணீர் மல்க பேட்டி கொடுத்தது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். 

மேலும் இவருக்கு ஆதரவாக ராதிகா மற்றும் ரம்யா கிருஷ்ணன் பக்க பலமாக இருந்ததோடு மட்டுமல்லாமல் பெண்களை இழிவு செய்யும் அமைச்சரின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீடியோ வழியாக பாரதப் பிரதமரை கேட்டுக்கொண்ட செய்திகள் பரவியது. 

இதனை அடுத்து பல Youtube சேனல்களில் நடிகை ரோஜா முன்னாள் அமைச்சர் பண்டாருவின் அருவருப்பை தூண்டி விடக் கூடிய பேச்சினால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி பரவியது. 

இந்த செய்திக்கு பதிலடி தரக்கூடிய வகையில் நான் எந்த விதத்திலும் கோழை அல்ல. என் மீது சுமத்தப்பட்டு இருக்கும் போலியான குற்றச்சாட்டுக்கு தக்க பதிலடி கொடுப்பேன். என் பக்கம் நியாயம் இருப்பதால் நான் கட்டாயம் தற்கொலை செய்து கொள்ள மாட்டேன். 

இது போன்ற சூழ்நிலையில் கண்டிப்பாக போராடி உண்மையை நிலை நிறுத்த முயல்வேன் என்று கூறியிருக்கிறார். மேலும் இது போன்ற பொய்யான செய்திகளை எந்த ஊடகங்களும் பரப்ப கூடாது. 

அவ்வாறு பரப்பக்கூடிய பட்சத்தில் அந்த ஊடகங்களின் மீதும் சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ? அந்த நடவடிக்கையை நிச்சயமாக எடுப்பேன் என உறுதியாக தெரிவித்திருக்கிறார். 

 இதனை அடுத்து என்ன செய்தியானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இனி மேலாவது இது போன்ற பொய்யான செய்திகளை ஊடகங்கள் பரப்பாமல் இருக்க வேண்டும்.