இப்படித்தான் திரிஷா மீண்டு(ம்) வந்தாராம்..!

 


சோழ நாட்டு இளவரசி குந்தவை பொன்னியின் செல்வன் படத்தில் பகுதி ஒன்று மற்றும் பகுதி இரண்டு கலக்கி செகண்ட் டின்னிங்சில் மாபெரும் வெற்றியை பெற்றதின் காரணத்தால் தொடர்ந்து படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்து சேர்ந்துள்ளது. 

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 23 வருடங்களுக்கு மேலாக நின்று வெற்றி பெற்ற நடிகைகளில் ஒருவராக திரிஷா இருக்கிறார். இந்நிலையில் இடையில் இவருக்கு சில சறுக்கல்கள் ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல், தன்னுடைய பர்சனல் வாழ்க்கையில் சங்கடங்கள் ஏற்பட்டு நிச்சயம் செய்த திருமணமும் நின்று போனது. 

திரை உலகிற்கு அறிமுகமான முதலில் புதிதில் லேசா லேசா என்ற படத்தில் அவர் முதலில் நடித்திருந்தாலும், முன்னதாக ரிலீசான படம் மௌனம் பேசியது என்ற படம் தான். இந்தப் படத்தில் இவரின் அபார நடிப்புத் திறனை பார்த்து பலரும் பாராட்டி இருந்ததோடு பல வகையான வாய்ப்புகளும் இவருக்கு வந்து சேர்ந்தது. 

இதனை அடுத்து தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் கொடி கட்டி பறந்த இவருக்கும், ராணாவிற்கும் காதல் என கிசுகிசுக்கள் எழுந்தபோது அவற்றை ராணாவின் குடும்பத்தார் மறுத்த நிலையில் தெலுங்கிலும் இவருக்கு மார்க்கெட் இல்லாமல் பறி போனது. 

தொடர்ந்து தெலுங்கில் புறக்கணிக்கப்பட்ட இவருக்கு தமிழிலும் அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த சூழ்நிலைகள் தான் மணிரத்தினம் திரிஷாவை நம்பி பொன்னியின் செல்வன் படத்தில் மிக முக்கிய கேரக்டர் ரோலான குந்தவை கதாபாத்திரத்தை கொடுத்தார். 

இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக் கொண்ட திரிஷா அந்த கேரக்டரில் பக்காவாக தனது நடிப்புத் திறனை காட்டியதைப் பார்த்து பெருவாரியான ரசிகர்கள் அவருக்கு ஆதரவு கரம் நீட்ட அடுத்தடுத்து படங்கள் வந்து சேர்ந்தது. 

அந்த வரிசையில் தற்போது இவர் லியோ படத்தின் வாய்ப்பை பெற்றிருக்கிறார். அதுமட்டுமா? தமிழில் உச்சகட்ட நடிகரான அஜித்தோடு ஜோடியாக விடா முயற்சி படத்திலும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ள நிலையில், ஹீரோக்கள் மட்டுமல்லாமல் ஹீரோயினாலும் கம்பேக் கொடுக்க முடியும் என்ற விஷயத்தை தெளிவுபடுத்தி விட்டார். 

எனவே வாழ்க்கையில் ஒருவர் எத்தனை முறை சறுக்கல்களை சந்தித்தாலும், அவற்றைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று வாய்ப்புகள் வரும் போது அதை தக்க முறையில் பயன்படுத்தினால் திரிஷாவை போல மீண்டும் ஒரு இன்னிங்ஸில் நாம் விளையாடுவதோடு வெற்றிவாகை சூட முடியும் என்பதற்கு உதாரணமாக தற்போது இவர் இருக்கிறார் என கூறலாம்.