தற்போது தென்னிந்திய திரையுலகில் டாப் இயக்குனர்களின் வரிசைகளில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருக்கும் லோகேஷ் கனகராஜ், "விக்ரம்" படத்தில் உலக நாயகனை வைத்து இயக்கி தனது அபார திறமையை வெளிப்படுத்தி மக்கள் மனதில் அசைக்க முடியாத இடத்தை பிடித்து விட்டார்.
இதனை அடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கக்கூடிய வாய்ப்பை பெற்றிருக்கும் இவரின் இயக்கத்தில் நடிக்க முடியாத என்று பல நடிகர் மட்டுமல்லாமல் நடிகைகளும் க்யூ வில் இருக்கிறார்கள் என்று கூறினால் மிகையாகாது.
ஆனால் அப்படிப்பட்ட வாய்ப்பு லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு கிடைத்தும், அந்த வாய்ப்பை வேண்டாம் என்று ஒதுக்கி தள்ளி இருப்பதின் காரணம் என்ன என்று தெரியவில்லை தற்போது இந்த பேச்சு மிகப்பெரிய அளவில் பிரபலமாகி உள்ளது.
அந்த வகையில் தற்போது வெளி வந்திருக்கும் கருத்துபடி நயன்தாரா இந்த படத்தில் நடிப்பதில்லை. காரணம் என்ன? என்று இதுவரை எவருக்கும் தெரியவில்லை. இவருக்கு பதிலாக வேறு நடிகைகளை நடிக்க வைக்க பட குழு முயன்று வருவதாக தெரிகிறது.
இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக இல்லை, ஆனால் தயாரிக்க உள்ளார். மேலும் இந்த படத்திற்கு லோகேஷ் கனகராஜ் கதை எழுதியுள்ள நிலையில் அவரது நெருங்கிய நண்பரும் இயக்குனருமான ரத்தினகுமார் தான் இந்த படத்தை இயக்க உள்ளார்.
படு பயங்கரமான ஹாரர் திரில்லர் கதை களத்தில் உருவாகும் இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக கூறப்பட்டது. தற்போது நயன்தாரா இந்த படத்தில் இருந்து விலகி விட்டார் என்ற தகவல் பலரையும் ஆச்சரியத்தில் தள்ளி உள்ளது.
என்ன காரணத்துக்காக இவர் படத்தில் இருந்து விலகினார் என்பது தெரியவில்லை.
எப்படி எது எப்படியோ படத்தில் ஹீரோ ராகவா லாரன்ஸ் என்பது உறுதியான நிலையில் ஹீரோயினி யார் என்பது இனிமேல் தான் தெரியவரும்.
மேலும் கதையில் சின்ன சின்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இனிவரும் நாட்களில் எந்த படத்தை பற்றி அப்டேட்டுகள் கிடைக்கலாம் என தெரியவந்துள்ளது.