ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளி வந்த லியோ திரைப்படத்தில் தளபதி விஜய் மற்றும் திரிஷா உட்பட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
பல்வேறு வகையான விமர்சனங்களை பெற்றிருக்கக் கூடிய இந்த படம் வெளிவருவதில் இருந்தே பல சிக்கல்கள் ஏற்பட்டு, சுமார் ஆறு நாட்களில் 400 கோடிக்கு மேல் வசூலில் சாதனை புரிந்துள்ளது என கூறலாம்.
எனினும் படம் குறித்த பல்வேறு வகையான விமர்சனங்களை பெற்று வரும் இந்த படத்தைப் பற்றி பிரபல பத்திரிக்கையாளர் வலைபேச்சு அந்தணன் பேட்டி ஒன்றில் திரிஷாவின் முத்த காட்சி பற்றி பகிரங்கமாக பேசியிருக்கிறார்.
மேலும் அந்த படத்தில் அந்த இடத்திற்கு லிப் லாக் அவசியம் தேவை. இது ஆபாசத்தை தூண்டுவது போல இல்லாமல் இருப்தால் தவறு இல்லை என்ற கருத்தை தெரிவித்து இருக்கும் இவர் திரிஷாவின் இந்த செயல்பாடு ஓகேவானது தான் என தெரிவித்திருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் லியோ திரைப்படத்தில் விஜய் ஹைனாவிடம் சண்டை போட்டு ரத்த கறையோடு இருப்பார். பின்னர் சட்டையை மாற்றி வீட்டுக்கு வரும்போது மனைவி திரிஷா சட்டையை ஏன் வீணாக்கி விட்டாய் என்று கேட்டு சண்டை போடுவார்.
இது மட்டுமல்லாமல் கணவர் ஹைனாவுடன் சண்டை போட்டு வரும்போது இப்படி எந்த மனைவியாவது கேட்பாளா? பதற மாட்டாளா? இந்த இடத்தில் கூட கணவன் மனைவி எப்படி பேசுவார்கள் என்று தெரியாமல் அந்த காட்சியை வைத்திருக்கிறார்கள் என்று அந்த காட்சியைப் பற்றி விமர்சனம் செய்திருக்கிறார்.
இது பற்றிய உங்கள் கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ள நீங்கள் வண்ணத்திரை பக்கத்தை எப்போதும் படியுங்கள்.