அருந்ததி திரைப்படத்தின் மூலம் பிரபலமான அனுஷ்கா தனது நடிப்பு திறமையின் காரணமாக அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பை பெற்றார். மேலும் ஹீரோக்களுக்கு நிகரான அந்தஸ்து இவருக்கு கிடைத்தது.
பாகுபலி படத்துக்கு பிறகு இவருக்கு தமிழ், தெலுங்கு என அடுத்தடுத்த படங்களில் முன்னணி ஹீரோக்களோடு நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இவர் முன்னணி ஹீரோக்களோடு தொடர்ந்து நடித்து பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.
குறிப்பாக பாகுபலி படத்தில் இவர் தேவசேனாவாக நடித்து பேன் இந்திய நடிகையாக உயர்ந்தார். இதனை அடுத்து இவர் ஆர்யாவுடன் ஜோடி சேர்ந்து இஞ்சி இடுப்பழகி என்ற படத்தில் நடித்த பிறகு பாட வாய்ப்புகள் குறைந்து போனது.
மேலும் உடல் எடை அதிகரித்ததின் காரணமாக எந்த அளவு படத்தில் உழைத்தாலும் அது இவருக்கு சரியான வெற்றியை கொடுக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். எனினும் மனம் தளராத அனுஷ்கா தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கிறார்.
அந்த வகையில் இவர் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் கடந்த ஏழாம் தேதி வெளியாகி மிகச்சிறந்த படமாக பேசப்படுகிறது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் அனுஷ்கா இருக்கிறார் என கூறலாம்.
இந்த வெற்றியை கொண்டாடக்கூடிய அனுஷ்கா அதிரடி முடிவு ஓன்றை எடுத்திருக்கிறார். அந்த முடிவு என்னவெனில் மலையாள படம் ஒன்றில் அறிமுகம் ஆக இருப்பது தான். இந்த படத்தை ஹோம் படத்தை இயக்கிய ரோஜின் தாமஸ் இயக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும் முதல் முறையாக மலையாள படத்தில் அடி எடுத்து வைக்கும் இவர் அங்கு தேவசேனாவை போல் தனது ஆட்சியை விரிவு செய்து விடுவாரா? என்று ரசிகர்கள் கேள்வி மேல் கேள்விகளை எழுப்பி வருவதோடு அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வண்ணத்திரை பக்கத்திற்கு ஆதரவை கொடுங்கள் மேலும் இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்ய மறக்காதீர்கள்.