தமிழக அரசியலில் மாற்றம் வராதா? என்று இளைஞர்கள் தவித்து வரக்கூடிய காலகட்டத்தில் திரைப்பட நடிகரான நடிகர் விஜய் தீவிர அரசியலில் இறங்க மாட்டாரா? என்று அவரது ரசிகர்கள் நினைக்கிறார்கள்.
அதற்கு தகுந்தது போல வருங்கால முதல்வரே என்று அழைத்து அடிக்கடி போஸ்டர்களை ஒட்டி ரணகளப்படுத்துவார்கள்.
அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என்ற கருத்தை சமூக வலைத்தளங்களில் போட்டு விறுவிறுப்பாக மாற்றி விட்டார்கள்.
வரும் அக்டோபர் 19ஆம் தேதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் திரையரங்குகளுக்கு வரக்கூடிய நேரத்தில் இந்த செய்தி தற்போது வைரலாக்கிவிட்டது.
இந்தப் படத்தை அடுத்து இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ள கூடிய சூழ்நிலையில் தளபதி 68 படத்தை முடித்த பிறகு சிறிது காலம் நடிப்பை நிறுத்திவிட்டு தீவிர அரசியலில் களம் இறங்க இருக்கலாம் என தெரிகிறது.
வரும் 2024 மே மாதத்திற்குள் வெங்கட் பிரபுவுடன் ஆன இந்த படத்தை நிறைவு செய்துவிட்டு 2025 ஆம் ஆண்டு முழுவதும் மக்கள் இயக்கம் மற்றும் களப்பணிகளில் அதிக கவனத்தை தளபதி செலுத்தலாம்.
இதனை அடுத்து 2026 ஆம் ஆண்டில் மாநாடுகள் நடத்த உள்ளதாகவும், அதற்கு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தளபதி விஜய் கவனத்தை செலுத்த மாட்டார் என்றும் இருவேறு கருத்துக்கள் வெளிவந்துள்ளது.
மேலும் இது குறித்து நடிகர் விஜய் அரசியல் பயணத்தைப் பற்றி அதிகாரப்பூர்வமான அறிக்கையை விரைவில் வெளியிடுவார் என நம்பப்படுகிறது.