கல்யாணம் தான் கட்டிக்கொண்டு ஓடிப்போலாமா.. இல்ல ஓடித்தான் போய் கல்யாணம் கட்டிக் கொள்ளலாமா.. என்ற பாடல் வரிகள் உங்களுக்கு நினைவில் இருக்கலாம். அந்த வரிகளில் தாலியத்தான் கட்டிக்கொண்டு பெத்துக் கொள்ளலாமா.. இல்ல பெத்துக் கொண்டு தாடியத்தான் கட்டிக் கொள்ளலாமா.. என்ற வரிகள் வரும்.
அந்த வரிகளை மெய்யாக்கக் கூடிய வகையில் தற்போது லிவிங் டுகதர் முறையில் குடும்பம் நடத்தி பிள்ளைகளை பெற்றுக் கொண்டு, நமது கலாச்சாரத்தை சீரழிக்க கூடிய மேற்கத்திய நாகரிகம் அதிகளவு இந்தியாவில் பரவி வருகிறது என கூறலாம்.
அந்த வகையில் அதற்கு உதாரணமாக தற்போது நடிகை இலியானா திருமணம் செய்து கொள்ளாமல், லிவிங் டுகதர் முறையில் வாழ்ந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு ஓர் ஆண் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார்.
இவர் தமிழ் திரையுலகில் கேடி மற்றும் நண்பன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்.
இவரா? இப்படி செய்துவிட்டார் என்று ரசிகர்கள் தற்போது அங்கலாயித்துக் கொள்கிறார்கள்.
அந்த வகையில் இவர் தற்போது இவருக்கு பிறந்திருக்கும் ஆண் குழந்தையின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வைரலாக்கிவிட்டார்.
இந்த புகைப்படங்கள் தான் தற்போது ரசிகர்கள் அதிகளவு பார்த்து வருகிறார்கள்.
குழந்தையை தோளில் சாய்த்து வைத்து கொஞ்சுவதும், விளையாடுவதுமாய் இருக்கக்கூடிய புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் நெஞ்சை தொட்டுவிட்டது என கூறலாம்.
எனினும் நமது கலாச்சாரத்தை மீறி இவரது இயங்க செயல் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது.
உங்களுக்கும் இந்த போட்டோஸ் பிடித்திருந்தால் நீங்கள் இந்த போட்டோசுக்கு தேவையான லைக்களை போட்டு உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.