விடாமுயற்சி படத்தில் இணையும் மூன்றாவது ஹீரோயின்..! - யாருன்னு பாருங்க..!

 


தளபதி விஜய் நடிப்பில் வெளிவரக்கூடிய லியோ படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் எப்படி ஆர்வமாக இருக்கிறார்களோ? அது போல நடிகர் தல அஜித்தின் துணிவு படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் கழிந்து விட்ட நிலையில், தல ரசிகர்களின் எதிர்பார்ப்பு விடாமுயற்சி படத்தின் மீது அதிகரித்து உள்ளது என கூறலாம். 

இந்த சூழ்நிலையில் இந்தப் படத்தை மகிழ்திருமேனி இயக்க இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே லைக்கா ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் வழக்கம் போல இசை அமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு துபாயில் உள்ள அஜர்பைஜான் நாட்டில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து ரசிகர்கள் மிகுந்த குஷியில் இருக்கிறார்கள். இந்தப் படத்தில் அஜித்துக்கு இணையாக திரிஷா, ரெஜினா போன்றவர்கள் நடிக்க இருப்பது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். 

இந்த சூழ்நிலையில் மேலும் ஒரு கதாநாயகி இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கக்கூடிய செய்தியானது தற்போது பரவலாக பேசப்படுகிறது. இதனை அடுத்து ரசிகர்களின் மத்தியில் யார் அந்த கதாநாயகி என்பது பற்றிய கருத்துக்கணிப்பு தற்போது நடந்து வருகிறது என கூறலாம். 


மேலும் இந்த கதாநாயகியின் வரவை அதிகளவு ரசிகைகள் தற்போது பேசி வருகிறார்கள். இந்த நிகழ்வானது இந்தப் படத்தை பற்றி மேலும் அதிக அளவு எதிர்பார்ப்பை உருவாக்கி விட்டது என கூறலாம். தற்போது மூன்றாவது கதாநாயகியாக இந்த படத்தில் இணைந்திருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர் தான். 

ஏற்கனவே இவரது நடிப்பில் வெளிவந்த படங்கள் இவருக்கு நல்ல பெயரை கொடுத்திருந்த நிலையில் தற்போது இந்த வாய்ப்பு இவரை தேடி சென்றுள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் மிகுந்த குஷியில் இருக்கிறார்கள். மூன்று கதாநாயகிகள் கொண்டு நகர்த்தப்படும் இந்த விடாமுயற்சியின் கதை, அம்சம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வத்தோடு இருக்கிறார்கள்.