தென்னிந்திய திரை உலகில் பிரபல கவர்ச்சியின் நடிகையாக திகழ்ந்த பாபிலோனாவை பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரிந்து இருக்கலாம். இவர் தமிழ் ரசிகர்களை குஷி படுத்திய படங்களாக தை பொறந்தாச்சு என்னம்மா கண்ணு, அசத்தல், என் புருஷன் குழந்தை மாதிரி, வட்டாரம் ஆகிய படங்களில் அதீத கிளாமர் காட்டி நடித்திருப்பார்.
அண்மைக்காலமாக இவருக்கு பண வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் பிட்னஸ் ட்ரெய்னர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு திரை உலகை திரும்பி கூட பார்க்கவில்லை. கணவன், மனைவி பிள்ளை குட்டி என சந்தோஷமாக வாழ்ந்து வரக்கூடிய இவரது வாழ்க்கையில் தற்போது புயல் அடித்து உள்ளது என்று கூறலாம்.
இதற்கு காரணம் இவரது சகோதரர் விக்கி மர்மமான முறையில் வீட்டில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் இவரை மட்டுமல்லாமல் சென்னை வாசிகளையும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.
மேலும் இவரது சகோதரர் ரவுடி எனக் கூறப்படுவதால் முன் விரோதனம் காரணமாக எவராவது இவரை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ள நிலையில் போலீசார் தீவிர தேடுதல் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் இது தற்கொலையாக இருக்குமோ? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தற்போது தீவிர விசாரணையை மேற்கொண்டு இருக்கிறார்கள். மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட தனது சகோதரனின் உடலைப் பார்த்து கதறிய நடிகைக்கு திரை உலகச் சார்ந்தோரும் மற்றவர்களும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.
இனிவரும் நாட்களில் போலீஸ் விசாரணையின் மூலம் இது கொலையா? அல்லது தற்கொலையா? என்பது விரைவில் தெரியவரும் என்று கூறலாம். உங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால் படித்து விட்டு உடனே உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து விடுங்கள்.