எல்லா வருடம் தீபாவளிக்கு ஸ்பெஷலாக ரசிகர்களை குஷிப்படுத்த கூடிய வகையில் திரைப்படங்கள் வெளிவரும். அதுவும் தமிழ் திரைப்படங்களை பொருத்தவரை படங்கள் வரிசையில் நிற்கும்.
ஆனால் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தீபாவளிக்கு மிக முக்கியமாக இரண்டு படங்கள் மட்டுமே வெளியாக உள்ளது. இன்னும் சில நாட்களில் இருக்கக்கூடிய நிலையில் 2023 ஆம் ஆண்டு தீபாவளிக்கு என்னென்ன படங்கள் வெளியாகும் என்ற அறிவிப்புகள் வர துவங்கி விட்டது.
இதனை அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரக்கூடிய அயலான் திரைப்படம் தீபாவளி அன்று ரிலீஸ் செய்யப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வந்துள்ளது. இதை அடுத்து ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிக்கும் ஜிகர்தண்டா XX படமும் இந்த வரிசையில் இணைந்துள்ளது.
ஏற்கனவே சென்ற தீபாவளி சமயத்தில் சிவகார்த்திகேயன் நடித்த பிரின்சஸ் படமும் கார்த்தி நடித்த சர்தார் படமும் வெளி வந்து இதில் கார்த்தியின் சர்தார் படம் பேசிக்கொள்ளும்படி இருந்து வசூலிலும் சாதனை புரிந்தது.
எனவே இந்த ஆண்டு வெளிவரும் இந்த இரண்டு படங்களில் எது வெற்றி பெறும் என்பது தீபாவளி முடிந்த சில நாட்களில் தெரியவரும். ஏற்கனவே ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் மற்றும் வேறு சில படங்கள் வெளிவந்த காரணத்தினால் இந்த இரண்டு படங்களுக்கும் கடுமையான போட்டி நிலவலாம் என கூறப்படுகிறது.