"கமலை வைத்து கல்லாக கட்டும் நயன்தாரா..! - லேடிஸ் சூப்பர் ஸ்டாரா? கொக்கா?

 

தென்னிந்திய திரைப்படங்களில் நடித்த மலையாளத்து பேரழகியான நயன்தாரா தமிழ் திரை உலகத்திற்கு ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதனை அடுத்து அண்மையில் இவர் பாலிவுட் திரைப்படமான ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானோடு இணைந்து நடித்து அந்த படம் மாபெரும் கிட்டை அடித்தது ,சுமார் ஆயிரம் கோடிக்கு மேல் வசூரில் சாதனை புரிந்தது. 

திருமணம் ஆன பிறகும் 35 வயதை தாண்டிய நடிகைகளின் மார்க்கெட் குறையும் என்ற வார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைத்து நயன்தாரா தன்னுடைய மார்க்கெட்டை அதிகரித்துக் கொண்டாரா? என்று கேட்கத் தூண்டக்கூடிய பல அளவு இவரது வளர்ச்சி தற்போது உள்ளது. 

இதற்குக் காரணம் ஜவான் திரைப்படத்தில் இவர் நடிக்க தனது சம்பளத்தை 10 கோடியாக வாங்கி இருக்கிறார். மேலும் திரைப்படத்தில் நடிப்பதோடு நின்று விடாமல் பல பிசினஸ்களை செய்து வரும் நயன்தாரா, அழகு சாதனம் முதல் ரியல் எஸ்டேட் வரை பல தொழில்களை செய்து வருகிறார். 

இந்நிலையில் இவர் நீண்ட நாட்களாக கமலஹாசன் படத்தில் நடிக்காமல் இருந்தார். ஆனால் இவர் தற்போது கமலஹாசன் மற்றும் மணிரத்தினத்தின் கூட்டணியில் உருவாகக்கூடிய கேஹெச் 234 படத்தில் கமலஹாசனுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

மேலும் கோலமாவு கோகிலா படத்தில் இவர் நடித்த போது இவரது சம்பளம் 3.5 முதல் 5 கோடியாக இருந்தது. இதனை அடுத்து கணெக்ட் திரைப்படத்திற்காக 8 கோடியை வாங்கிய இவர் பாலிவுட் சென்ற பின் 10 கோடியாக தனது சம்பளத்தை உயர்த்தினார். 

தற்போது பலவிதமான தொழில்களை செய்து வரும் இவர், தமிழ் திரைப்படத்தில் நடிக்க குறிப்பாக கமலஹாசன் படத்தில் நடிப்பதற்காக 12 கோடியை கேட்டு வாங்கி கல்லா கட்டி இருக்கின்ற விஷயம் தற்போது திரையுலக வரலாற்றில் மிகப்பெரிய ஒன்றாக பேசப்படுகிறது. 

 மேலும் அசாத்திய திறமையோடு செயல்பட்டு வரும் நயன்தாரா இது போல பல வெற்றிகளை பெறுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று அவரது ரசிகர்கள் அவருக்கு ஆதரவு கரம் நீட்டி இருக்கிறார்கள். 

இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் எங்களது வண்ணத்திரை பக்கத்திற்கு ஆதரவு அளித்துவிட்டு படித்த பகுதியை உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள்.