"காதலனோடு ஜாலியாய் அவுட்டிங் போன பிரியா பவானி சங்கர்..!" - காதலனுக்கு போட்ட கண்டிஷன்..

 

சின்னத்திரையில் நடித்து வந்தவர்கள் வெள்ளி திரைக்கு செல்வது இன்று அதிகமாகி உள்ளது என்று தான் கூற வேண்டும். அந்த வகையில் உதாரணமாக சின்னத்திரையில் நடித்து வந்த வாணி போஜன், சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்பட்டவர் பெரிய திரையில் தற்போது நடித்திருக்கிறார். 

அது போலவே சின்ன திரையில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர் தற்போது, தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக மாறி இருக்கிறார். தனது அபார திறமையை திரைப்படங்களில் காட்டியிருக்கும் இவருக்கு தல அஜித் படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு அண்மையில் கிடைத்துள்ளது. 

இதனை அடுத்து விடாமுயற்சி திரைப்படத்தில் இவர் மூன்றாவது கதாநாயகியாக களம் இறங்கி உள்ள நிலையில் தற்போது அளித்திருக்கும் பேட்டியைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ந்திருக்கிறார்கள். இதற்கு காரணம் பிரியா பவானி சங்கருக்கு நீண்ட நாள் காதலர் ஒருவர் இருக்கிறார்? அந்த காதலருடன் அவர் தற்போது அவுட்டிங் சென்று இருக்கிறார். 

பிசியான செட்டியூரில் தனது காதலருக்கு என்று நேரத்தை ஒதுக்கி அவரோடு இணைந்து ஊர் சுற்றி இருப்பதை பார்த்து தான் ரசிகர்கள் அதிர்ந்து இருக்கிறார்கள். மேலும் தான் 18 வயதாக இருக்கும்போதே காதலிக்க ஆரம்பித்து விட்டதாகவும், அன்று முதல் இன்று வரை அந்த காதலரிடம் ஒரு கண்டிஷன் போட்டு இருப்பதாகவும் கூறி அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டார். 

அந்த கண்டிஷன்ஸ் என்ன என்று கேட்டால் நீங்கள் கடுப்பாகி விடுவீர்கள் அதாவது பொசு, பொசுவென்று இருக்கும் சாஃப்ட் பொம்மைகளை வாங்குவது, அதற்கு சாப்பாடு ஊட்டி விட்டு விளையாடுவது, கட்டிப்பிடித்து தூங்குவது போன்றவை தனக்கு பிடிக்காது என்ற கருத்தை தெரிவித்திருக்கிறார். 

 துபோல நாய்க்குட்டிகளை கொஞ்சுவதும் தனக்கு பிடிக்காத விஷயம். ஆனால் பணத்தை சாப்பாட்டிற்கு செலவு செய்யலாம். அது மிகவும் பிடித்த விஷயம் என்று கூறுகிறார். இதனை அடுத்து பிரியா பவானி சங்கர் காதலரோடு அவுட்டிங் சென்று இருப்பது ஹோட்டலுக்கு தான் என்பது தெரிந்து விட்டது. 

மேலும் இவர் ஈசி ஆர் அருகில் இருக்கும் ரெஸ்டாரன்ட் ஒன்றை ஓப்பன் செய்தும் வைத்திருக்கிறார். இந்த செய்தி ரசிகர்களின் மத்தியில் தற்போது களாக பரவியுள்ளது.