"லியோ நடன கலைஞர்களுக்கு சம்பளம் தரவில்லையா..!" - வெடிக்கும் விவகாரம்..!

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவரக்கூடிய ரியோ படமானது வரும் 19ஆம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாகி வர கூடிய சூழ்நிலைகள் தற்போது இதில் நடித்த நடன கலைஞர்களுக்கு சம்பளம் தரவில்லை என்ற விவகாரம் வெடிக்க ஆரம்பித்துள்ளது. 

தற்போது இந்த படத்தின் பிரமோஷன் வேலைகளை ஓடி ஆடி பார்த்து வரக்கூடிய வேலையில் பல வகையான பேட்டிகளை இயக்குனர் கொடுத்து வருகிறார். 

மேலும் விஜயின் திரையுலக வாழ்க்கையில் எந்த படம் மாபெரும் திருப்புமுனையாக இருக்கும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது என கூறலாம்.

அடுத்தடுத்த பாடல்களை எதிர்நோக்கி காத்திருக்கும் ரசிகர்களுக்கு லியோ படம் விருந்தாக அமையும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகி வரும் சூழலில் விஜயின் பிறந்தநாளை ஒட்டி வெளியான நான் ரெடி பாடல் Youtube-ல் தொடர்ந்து ஆதரவை பெற்று ரசிகர்களை கவர்ந்தது. 

மேலும் இந்தப் படத்தில் ஏராளமான நடன கலைஞர்கள் பாடலில் நடனமாட வைக்கப்பட்டதோடு சுமார் 1300 க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் சூட்டிங் இல் பயன்படுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. மேலும் இதுவரை அவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை என்ற புகார் தற்போது எழுந்துள்ளது. 

சுமார் ஏழு நாட்கள் நடைபெற்ற எந்த ஷூட்டிங்கில் அவர்கள் 7 நாட்கள் நடனமாடிய நிலையில் ஒருநாள் கூட சம்பளம் பெறவில்லை என நடனக்கடங்குகள் தொடர்ந்து புகார்களை தெரிவித்து வருகிறார்கள் மூன்று நாட்களுக்குள் சம்பள பாக்கியத்தை செட்டில் செய்யவில்லை என்றால் நீதிமன்றத்தை நாட போவதாகவும் கூறி இருக்கிறார்கள். 

இந்த சூழ்நிலையில் சுமார் 800-க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஏழு நாட்கள் நடந்த இந்த படப்பிடிப்பு அதற்காக 22000 ரூபாய் சம்பளமாக பேசப்பட்டதாகவும், ஆனால் 7000 ரூபாய் மட்டுமே தரப்பட்டதாகவும் இந்த பாடலுக்காக தமிழகம் முழுவதும் இருந்து 1500 கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டு தினேஷ் மாஸ்டர் முன் நடனமாடி இருந்ததாக கூறியிருக்கிறார்கள். 

எனவே படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னதாக நடிகர் விஜயாவதே இந்த விவகாரத்தில் தலையிட்டு தங்களுக்குரிய சம்பள பாகையை பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இருக்கிறார்கள். 

எனவே இந்த விவகாரத்தில் தயாரிப்பாளர் லலித் குமார் படம் வெளியாவதற்கு முன்பே விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என நம்பலாம்.