சில வாரங்களாகவே நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இமான் இடையே ஏற்பட்டு இருக்க கூடிய மோதல்கள் இணையத்தை மட்டுமல்லாமல் திரை உலக வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை இந்த விஷயத்தைப் பற்றி வாய் திறக்காத சிவகார்த்திகேயனின் செயலால் மேலும் மேலும் இந்த மோதல் அதிகரித்த வண்ணம் உள்ளது என கூறலாம்.
அதுமட்டுமல்லாமல் புகார் கூறியிருக்கும் இசையமைப்பாளர் இமான் மீது பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வரும் வேளையில் சிவகார்த்திகேயனை காப்பாற்ற ஊடகங்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் ரசிகர்களும் முன் வந்திருக்கிறார்கள்.
எனினும் தமிழ் சினிமாவில் பிரபலமான அந்தஸ்தை பெற்றிருக்கும் ஒரு இசை அமைப்பாளர் தனக்கு துரோகம் செய்து விட்டதாக குற்றச்சாட்டினை வைத்திருக்கக் கூடிய நிலையில் சிவகார்த்திகேயன் தக்க பதிலை தராமல் தாமதம் செய்து வருவது எதனால் என்ற சந்தேகம் எழுகிறது.
சிவகார்த்திகேயன் எப்படிப்பட்டவர் என்பது தற்போது பிரச்சனை இல்லை. இமானின் புகாருக்கு அவரது பதில் என்ன என்பதை இன்று வரை கிடைக்காத நிலையில் இந்தப் புகாரை கண்டுகொள்ளாமல் உதாசீனப்படுத்தக்கூடிய சிவகார்த்திகேயன் இனியாவது இதற்கு பதில் கொடுப்பாரா? என்ற பேச்சுக்கள் தற்போது இணையத்தில் எழுந்து விட்டது.
மேலும் சமூக ஊடகங்களில் பரவி இருக்கக்கூடிய வீடியோவில் சிவகார்த்திகேயன் நண்பன் என்று ஒருவர் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு தன்னுடைய பெயரில் இந்த செய்தியை வெளியிட வேண்டாம் என்று கேட்டிருக்கிறார். மேலும் அவர் கூறிய செய்தியை மட்டும் வெளியிட சொன்னாராம்.
எனவே இந்த செய்தியை வெளியிடுகிறோம் என ஒரு முன்னணி ஊடகம் கூறியுள்ளது. அந்த ஊடகம் வெளியிட்ட தகவல் என்னவென்றால் இமான் தன் இசையில் பாடக்கூடிய பாடகிகளிடம் ஆபாச சேட்டிங்கில் ஈடுபடுவார்.
திரை உலகில் இதெல்லாம் சகஜம் என்ற போதிலும் இதனை அவரது மனைவி கண்டித்து இருக்கிறார். இதற்காகத்தான் இமானிடம், முன்னாள் மனைவி மோனிகா பலமுறை சண்டை போட்டு இருக்கிறார். இதுவே அவர்களது உறவின் விரிசலை ஏற்படுத்தி விட்டது.
அது மட்டுமா? ஆபாச சாட்டிங் உடன் நின்று விடாமல் இமான் அவர்களை அடிக்கடி ஸ்டுடியோவிற்கு டேட்டிங் செய்ய அழைத்து வந்திருக்கிறார். இந்த விஷயத்தை இமானின் மனைவி தன்னுடைய நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயனிடம் சொல்லி இருக்கிறார்.
இதனை அடுத்து சிவகார்த்திகேயனும் அண்ணனிடம் இது பற்றி பேசுகிறேன் அண்ணன் செய்வது தவறு என தெரிந்தால் நீங்கள் என்ன முடிவு எடுப்பீர்கள். உங்களுடைய முடிவு என்ன என கேட்டிருக்கிறார்.
மேலும் இவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்படக்கூடிய சமயங்களில் இமானின் அப்பா தான் இவரை சேர்த்து வைத்திருக்கிறார்.
எனவே உடனடியாக இந்த விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க சிவகார்த்திகேயன் நடந்ததை பகிர வேண்டும். அவ்வாறு பகிராத பட்சத்தில் இந்த பிரச்சனை வளர்ந்து கொண்டே செல்லும்.