இதனால் தான் கீர்த்தி சுரேஷ், பிரியா பவானி ஷங்கர் மார்கெட் காலியானது..! - உண்மையை உளறிய பிரபலம்..!

 


சினிமாவிற்கு வந்த பிறகு நடிகைகள் சில பேர் பீக்கில் செல்வதோடு சக்கை போடு போட்டு நடித்து வருவார்கள். ஆனால் ஒரு காலகட்டத்தில் என்ன ஆனது என்று தெரியாமல் அவர்களுக்கு வாய்ப்புக்கள் குறைந்து போவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் விரும்பக்கூடிய நிலையும் மாறிவிடும் இதற்கு என்ன காரணம் என்ன என்று உங்களுக்கு தெரியுமா?.  

மேலும் இந்த சினிமா நட்சத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பலரும் பல வகைகளில் விமர்சனம் செய்வார்கள். அப்படித்தான் சமீபகாலமாக பிரபலங்களின் நிலை குறித்து டாக்டர் காந்தராஜ் பேசி வருகிறார். 

இவரது பேச்சில் உண்மை இருக்கிறதா? என்பதை நாம் ஆய்வு செய்து தான் பார்க்க வேண்டும். அந்த அளவுக்கு சில விஷயங்களை அவர் விளக்கி இருக்கிறார். அதுவும் நல்ல முறையில் சென்று கொண்டிருக்கும் நடிகைகளின் மார்க்கெட் திடீர் என்று நாசமாக என்ன காரணம் என்பதை மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறார். 

அந்த காரணத்தில் மிகவும் முக்கியமானதாக கூறப்படுவது பியூட்டி பார்லர் தான். பியூட்டி பார்லர் போவதால் நடிகைகளின் மார்க்கெட் தரை டிக்கட் லெவலுக்கு சென்று விடுமா? என்று நீங்கள் யோசிக்கலாம். உடல் எடையை குறைக்க வேண்டும் என்று பியூட்டி பார்லரை நோக்கி படை எடுத்துச் செல்லும் நடிகைகள் ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்குமே திரை உலகில் நிலைத்து இருக்க முடிவதில்லை என்ற உண்மையில் தான் கூறி இருக்கிறார். 

அதற்கு உதாரணமாக நடிகை கீர்த்தி சுரேஷ் படத்தில் நடிக்க வந்தபோது படு அழகாக இருந்தாங்க. எங்கயோ போய் பியூட்டி பார்லருக்கு சென்று ஆள் எலும்பும் தோலுமாக திரும்பி வந்த பிறகு இவரது மார்க்கெட் ரொம்ப டல்லாகி விட்டது என்று கூறியிருக்கிறார். 

அதுபோலவே பிரியா பவானி சங்கர் ஒல்லியாகி மார்க்கெட்டை கெடுத்துக் கொண்டார். சில கவர்ச்சி அம்சங்கள் நடிகைகளுக்கு இல்லை என்றால் சினிமாத்துறையில் அவர்களால் நின்று அடிக்க முடியாது. பியூட்டி பார்லருக்கு சென்றாலே நடிகைகளின் மார்க்கெட் க்ளோஸ் என்ற விஷயத்தை ஆணித்தரமாக ஆக்குவேர் ஆணிவேராக பிரித்து சொல்லியிருக்கிறார். 

ஏற்கனவே இது போல தான் நடிகை ஸ்ரீபிரியாவும் ரசிகர்கள் ஒதுக்கி இருந்தார்கள் தற்போது அந்த லிஸ்டில் கீர்த்தி சுரேஷ், பிரியா பவானி சங்கர் இணைந்து விட்டார்கள். அதுமட்டுமல்லாமல் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் அதிதியும் முதல் படத்தில் காட்டிய வேகம் அடுத்த படத்தில் இருந்தாலும் அவர் ஒல்லியான காரணத்தால் அவரது மார்க்கெட்டும் விழுந்து விட்டது எனக் கூறியிருக்கிறார். 

டாக்டர் காந்தராஜ் கூறிய கருத்தில் உங்களுக்கு ஏதேனும் உடன்பாடு உள்ளதா அல்லது அது தவறு என்று நீங்கள் நினைக்கிறீர்களா? உங்களது அபிப்ராயத்தில் எது சரி என்று நீங்கள் நினைக்கிறீர்களோ? அதை கமெண்டில் தெரிவித்து இந்த பதிவுக்கு லைக்குகளை அள்ளிப் போடுங்கள்.