"மூன்று வருடமா என்ன ஃபாலோ செஞ்சாங்க..!" - ரம்யா பாண்டியன் உடைத்த உண்மை..

 


இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மொட்டை மாடிகளில் எடுக்கின்ற போட்டோ சூட்டின் மூலம் அதிக அளவு பிரபலமான நடிகையாக ரம்யா பாண்டியன் விளங்குகிறார். இவர் முதன் முதலில் ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைகளுக்கு அறிமுகமானார். 

 இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருந்தால் பிக் பாஸ் சீசன் 4 கில் கலந்து கொண்டு இறுதி சுற்று வரை முன்னேறிய இவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. எனினும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் ஆதரவு கிடைத்தது. 

அந்த வகையில் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பேச்சைக் கேட்டு பலரும் ஆச்சிரியம் அடைந்திருக்கிறார்கள். அதாவது இவர் கல்லூரியில் படிக்கும் போது தன்னை பார்ப்பதற்கு என்று ஒருவர் பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருப்பார். 

மேலும் அந்த நபர் கல்லூரி விட்டு நான் திரும்பி வரும் வரை அந்த இடத்திலேயே நின்று கொண்டிருப்பார். இது மாறியாக மூன்று வருடங்கள் தன்னை தொடர்ந்து ஃபாலோ செய்து கொண்டே வந்திருக்கிறார். 

இந்நிலையில் கடைசியாக ஒரு நாள் என்னை பார்த்து ப்ரபோஸ் செய்ய வந்த சமயத்தில் நான் அதற்கு முடியாது என்று கூறிய விஷயத்தை தற்போது ரம்யா பாண்டியன் பகிர்ந்து இருக்கிறார்கள். எந்த விஷயம்தான் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகிவிட்டது. 

 இதனை கேள்விப்பட்ட இன்னும் சில ரசிகர்கள்கள் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகவே நாங்கள் உங்களை ஃபாலோ செய்து வருகிறோம். நீங்கள் எங்களுக்கு என்ன பதிலை தருவீர்கள் என்பதை நக்கலாக கேட்டிருக்கிறார்கள். 

இதற்கு என்ன பதில் இவர் அளிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்த்து தான் நாம் தெரிந்து கொள்ள முடியும். இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் வண்ணத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்களோடு ஷேர் செய்து கொள்ளுங்கள். எங்களுக்கு உங்களது மேலான ஆதரவை கொடுங்கள்.