உலக நாயகன் கமலஹாசன் அன்று முதல் இன்று வரை தனக்கு என்று ஒரு தனி இடத்தை தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் உலக திரைப்பட துறைகளிலும் பிடித்திருக்கிறார் என்றால் மிகை ஆகாது. இவரை ஒரு சினிமா என்சைக்ளோபீடியா என்று தான் அனைவரும் அழைக்கிறார்கள்.
அப்படிப்பட்ட கமலஹாசனின் அந்தரங்க வாழ்க்கை அவ்வளவு இனிதாக இல்லை என்று தான் கூற வேண்டும். சினிமா படங்களில் காதல் மன்னனாக வாழ்ந்த இவருக்கு நிலையான வாழ்க்கை துணை அமையவில்லை என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்.
மேலும் இவர் நிஜ வாழ்விலும் பல நடிகைகளின் மீது காதல் கொண்டதாக பல கிசுகிசுக்கள் எழுந்திருந்த நிலையில், சில நடிகைகள் அவர் படத்தில் நடிப்பதற்கு பயந்தார்கள். அந்த நடிகைகள் நடிப்பதற்கு பயந்ததோடு மட்டுமல்லாமல், அவரது பட வாய்ப்பையும் வேண்டாம் என உதறி தள்ளி இருக்கிறார்கள்.
சினிமா வாழ்க்கையில் மகத்தான வெற்றியைப் பெற்ற இவரது நிஜ வாழ்க்கையில் ஏகப்பட்ட சிக்கல்களை சந்தித்து இருக்கிறார். திருமணத்தை பொறுத்தவரை இரண்டு திருமணங்களை செய்து கொண்ட இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளார்கள். இந்த இரண்டு திருமணங்களுமே விவாகரத்தில் தான் முடிந்தது.
இது போன்ற சமயத்தில் ஒரு நிருபர் எப்படி கல்யாணம், விவாகரத்து அடுத்து காதல் என சந்திக்கக்கூடிய கமலஹாசனுக்கு பெண்கள் மீது மரியாதை இல்லையா? என்ற எண்ணத்தை ஏற்படுகிறது. இது பற்றி உங்களுக்கு கவலை இல்லையா? என்ற கேள்வியை கேட்டு இருக்கிறார்.
அதற்கு சற்றும் கவலைப்படாத கமலஹாசன் இப்போது என் சொந்த விஷயம் சந்தோசம் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும் எனக்குள் நிறைய சோகங்கள் இழப்புக்கள் உள்ளது. இந்த பிரச்சனைகளை நான் மற்றவர்களைப் போல் உங்களிடம் பேச விரும்பவில்லை அது என் தனிப்பட்ட விவகாரம்.
எனினும் எனக்கு இரு மகள்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு கடமை ஆற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. அதில் இருந்து நான் கொஞ்சம் கூட விலக மாட்டேன் என்று கூறியதின் மூலம் பெண்கள் மீதும், பெண் பிள்ளைகள் மீதும் அவர் கொண்டிருக்கும் பற்று வெளிப்பட்டுள்ளது என கூறலாம்.
எனவே பெண்கள் விஷயத்தில் மோசமாக சித்தரிக்கப்பட்ட கமலஹாசன் தன் பெண் பிள்ளைகள் மீது கொண்டிருக்கும், பாசத்தை பார்த்து பலரும் வியந்து விட்டார்கள். இதனை அடுத்து அட இவருக்குள்ளும் இப்படி ஒரு ஈரமானது உள்ளதா என்று ஒவ்வொருவரும் தங்களுக்குள் பேசி வருகிறார்கள்.