"வாயாடி வாரிசு என்பதை நிரூபித்த ஜோவிகா" - நடிகை விசித்ராவை பார்த்து கேட்ட வார்த்தை..!



தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்ற பழமொழிக்கு ஏற்ப தற்போது விஜய் டிவியில் நடந்து வரும் பிரம்மாண்டமான ஷோவான பிக் பாஸ் சீசன் 7ல் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா கலந்து கொண்டு கலக்கி வரும் விஷயம் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். 

தனக்கு படிப்பு மண்டையில் ஏறவில்லை என்பதால் ஒன்பதாம் வகுப்போடு பள்ளி படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு, பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் இவர் தான் எதனால் படிக்கவில்லை என்பதை பிக் பாஸ் வீட்டில் தெளிவுபடுத்தி இருக்கிறார். 

இதனை அடுத்து இவருக்கு அட்வைஸ் செய்த நடிகை விசித்ராவை ஒருமையில் பேசியதோடு மட்டுமல்லாமல் அம்மாவைப் போலவே வம்பு சண்டையும் போட்டு இருக்கிறார். அட அப்படி என்ன விஜித்ரா கூறிவிட்டார். 

எப்படியாவது கஷ்டப்பட்டு பன்னிரண்டாம் வகுப்பு பாஸ் செய்துவிடு என்று கூறியதை அடுத்து, தனக்கு அட்வைஸ் செய்வதை விஜித்ரா நிறுத்திக் கொள்ள வேண்டும் என பேசியதோடு மட்டுமல்லாமல் குழாயடி சண்டையைப் போல அவரோடு மல்லு கட்டி இருக்கிறார். 

அது மட்டுமா? இந்த ஷோவுக்கு வந்தது நான் தான். என் அம்மாவோ, தாத்தாவோ இல்லை. என்னை பத்தி மட்டும் நீ பேசு.. என் பேக்ரவுண்ட் பத்தி நீ பேசாதே.. என்று கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி இருப்பதோடு பெரியவர்களுக்கு மதிப்பு தர வேண்டும் என்ற பண்பு தெரியாமல் வளர்ந்த பிள்ளை தான் இது என்று கூற வைத்து விட்டார். 

 அதுமட்டுமல்ல உங்கள் அம்மா அட்வைஸ் சொன்னா, கேக்க மாட்டியா? என்று விஜித்ரா கேட்க அது எங்க அம்மா சொன்னா, நான் கேட்பேன் நீ சொல்லணும் என்கிற அவசியம் இல்லை என்று மதிப்பளிக்காமல் வார்த்தைகளை அள்ளி தெளித்து இருக்கிறார்.

இதனை அடுத்து இந்த சண்டை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி விட்டதோடு மட்டுமல்லாமல், ஜோவிகாவின் செயலை அவர் அம்மாவோடு ஒப்பிட்டு பேச ஆரம்பித்து விட்டார்கள். அட கலி முத்தி போச்சு யாருக்கும் தயவு செய்து அட்வைஸ் பண்ணாதீங்க.. என்ற உணர்வை இது தூண்டி விட்டுள்ளது என கூறலாம்.