உன்னை இழந்த சோகத்தை நான் எப்படி தாங்கிக் கொள்வேன். - ஹன்சிகா உருக்கம்.!

 


டார்லிங் டம்பக்கு மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் விஜய், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களோடு நடித்திருக்கிறார். 

தற்போது புதிய நடிகைகளின் வரத்து காரணமாக இவருக்கு வாய்ப்பு இல்லாமல் போகவே, கடந்த ஆண்டு தான் காதலித்த சோகைல் கதூரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் பழமை வாய்ந்த அரண்மனையில் கோலாகலமாக நடைபெற்றது. திருமணம் செய்து கொண்ட பிறகும் கணவர் சினிமாவில் நடிக்க ஒப்புக்கொண்டதன் காரணமாக தற்போது இரண்டாவது இன்னிங்ஸை ஹன்சிகா மோத்வானி துவங்கியிருக்கிறார். 

இதனை அடுத்து இவர் ஆதிக்குடன் ஜோடியாக பார்ட்னர் திரைப்படத்தில் நடித்தது விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திரைப்படங்களை எந்த அளவு ஹன்சிகா விரும்புகிறாரோ, அதே அளவு செல்லப்பிராணிகளை வளர்ப்பதிலும் இவருக்கு அபரிமிதமான ஆசை உள்ளது. 

இதனை அடுத்து இவர் தனது வீட்டில் நாய் குட்டிகளை வளர்த்து வருகிறார். தனது சொந்த மகன் போல வளர்த்து வந்த நாய்க்குட்டி புரூஸோ தற்போது மரணம் அடைந்து விட்டது. இந்த செல்லப்பிராணிகள் மரணத்தை தனது Instagram பக்கத்தில் மிகவும் சோகமாக பதிவிட்டு அந்த பதிவை வைரலாக மாற்றிவிட்டார் என கூறலாம். 

இதற்குக் காரணம் இந்த பதிவில் அன்புள்ள ப்ரூஸோ நான் உன்னை மிகவும் மிஸ் செய்கிறேன். நீ என்னுடைய சிறந்த மகன் உன்னை இழந்த வலி என்னால் விவரிக்க முடியவில்லை எனக் கூறி இருப்பதோடு, அமைதியாக ஓய்வு எடு. டேடி மற்றும் பார்பி உன்னை மிஸ் பண்ணுகிறது. ஐ லவ் யூ என பதிவிட்டு இருக்கிறார். 

இந்த பதிவு தற்போது ரசிகர்களின் மத்தியில் பெருத்த ஆதரவை பெற்றிருப்பதோடு ஹன்சிகாவிற்கு அவர்கள் தங்களது ஆறுதலையும் கூறி வருகிறார்கள்.