கௌதமியின் சொத்த ஆட்டைய போட்டாங்களா? - இது என்னடா புது கதை..!

 


90 காலகட்டங்களில் உச்சகட்ட நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் தான் நடிகை கௌதமி. இவர் தமிழில் இருக்கும் முன்னணி ஹீரோக்கள் அத்தனை பேரோடும் ஜோடி போட்டு நடித்திருக்கிறார். 

இதன் பிறகு வாய்ப்புகள் குறைய தொடங்கியதை அடுத்து திருமணம் செய்து சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த கௌதமி, தனக்கும் தான் திருமணம் செய்து கொண்ட நபருக்கும் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டதால் விவாகரத்து பெற்று அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார். 

இதற்கிடையே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதன் பாதிப்பிலிருந்து மீண்டு வந்த இவர் பல கோடி பேருக்கு அந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய வகையில் உள்ள விடயங்களில் ஈடுபட்டு வருகிறார். 

மேலும் இந்தியா திரும்பிய கௌதமி, கமலஹாசன் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் டூகதர் முறையில் பல ஆண்டுகள் வாழ்ந்து வந்தார்கள். இதனை அடுத்து மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கமலை விட்டு பிரிவதாக கௌதமி அறிவித்தார். 

தற்போது சென்னையில் தன் மகளுடன் வசித்து வரும் கௌதமி 25 ஆண்டு காலமாக பாஜக கட்சியில் உறுப்பினராக இருந்து வருகிறார். இந்நிலையில் பாஜகவில் இருந்து விலகப் போவதாக அறிவித்திருந்தது ஏன் என்ற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. 

கடந்த பல ஆண்டுகளாக இந்த கட்சிக்காக உழைத்து வந்த கௌதமிக்கு மிகப்பெரிய மோசடி நடந்து விட்டதாக கூறுகிறார். மேலும் கௌதமியின் விவாகரத்துக்கு பிறகு தனிமையில் இருந்த அவருக்கு பாஜக நிர்வாகியான சி அழகப்பன் என்பவர் அறிமுகம் ஆகி இருக்கிறார். 

இந்த நபரையும் அவரது குடும்பத்தையும் கௌதமி அதிகளவு நம்பியதோடு தன்னுடைய சொத்துக்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை கொடுத்திருக்கிறார். இதில் சுமார் 25 கோடி மதிப்பிலான நிலம் ஒன்றை வாங்கும் பொறுப்பை அவரிடம் கொடுத்த போது அதில் தன்னுடைய மனைவியின் பெயரையும் சேர்த்து பத்திரத்தில் பதிவு செய்து மோசடி செய்து விட்டார். 

இந்நிலையில் இது பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்த கௌதமி பாஜகவில் இருக்கும் அத்தனை நபர்களும் அழகப்பனுக்கே ஆதரவு தெரிவித்து வருவதால் கடுமையான மன உளைச்சல் அடைந்து இருப்பதாக தெரியவந்துள்ளது. 

இதனை அடுத்து தமிழக முதல்வர் மீது தனக்கு அதிக நம்பிக்கை இருப்பதாக கௌதமி சொல்லி இருக்கிறார். இந்த மோசடி வழக்கு தனக்கு நியாயம் கிடைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருப்பதன் மூலம் விரைவில் திமுகவில் இணையலாம் என்று நம்பப்படுகிறது.