அழகில் அம்மா-வை மிஞ்சிய மகள்..! - அனோஷ்கா அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

 

தங்கத்தாமரை பெண்ணே என்ற பாடல் வரிகளை பாடக்கூடிய வகையில் தற்போது தல அஜித் மற்றும் ஷாலினியின் மகள் போட்டோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த போட்டோவில் இருக்கும் ஷாலினி மற்றும் அஜித்தின் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். 

தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்து கொண்ட நட்சத்திர ஜோடிகளில் தல அஜித் மற்றும் ஷாலினியும் ஒருவர். இவர்கள் இருவரும் 2000 ஆவது ஆண்டில் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளார்கள். 

இதில் ஆசைக்கு ஒரு பெண் அனோஷ்கா மற்றும் ஆஸ்திக்கு ஒரு மகன் ஆத்விக் என அன்பான குடும்பத்தில் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இவர்களது குடும்பம் உள்ளது என கூறலாம். அஜித்தை பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. மிகச்சிறந்த மனிதரான இவர் ஏராளமான ரசிகர்களுக்கும் சொந்தக்காரர். 


தமிழ் சினிமாவை பொருத்தவரை தனது சொந்த உழைப்பால் இந்த அளவிற்கு முன்னேறிய நபர், யார் என்று கேட்டால் பளிச் என்று அஜித்தினை எவரும் சொல்லுவார்கள். இதனை அடுத்து தற்போது விடாமுயற்சி படத்தின் நடித்து வரும் தல அஜித் என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். 

இந்நிலையில் தல அஜித்தின் மகள் தனது தாய் ஷாலினியோடு எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் பரவி ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்து விட்டது. இந்த புகைப்படத்தில் தனது மகளோடு காட்சி தந்திருக்கும் ஷாலினியும் என்னும் இளமையாக இருப்பது தெரிகிறது. 

இவரது மகள் கருப்பு உடையில் மிரட்டக்கூடிய வகையில் சிரித்துக் கொண்டு போஸ் தந்திருப்பது, அடுத்த படத்திற்கான புதிய ஹீரோயின் ரெடி? எப்போது சினிமாவில் அவர் என்ட்ரி கொடுப்பார் என்ற கேள்வி அலைகளை தற்போது ஏற்படுத்தி விட்டது. இதனை அடுத்து தல ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்து இருக்கிறார்கள். 

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்க்கும் பட்சத்தில் அதற்குரிய லைக்குகளை தராமல் செல்ல மாட்டீர்கள். இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வண்ணத்திரை பக்கங்களுக்கு உங்கள் மேலான ஆதரவை கொடுங்கள்.மேலும் இந்த பதிவினை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.