தமிழ் திரை உலகில் லேடிஸ் சூப்பர் ஸ்டாருக்கு பிறகு அந்த இடத்திற்கு பொருத்தமான நபராக யார் இருப்பார்கள் என்று கேட்டால் உடனடியாக கிடைக்கக்கூடிய பதில் திரிஷா தான் இவர் திரை உலகில் முன்னணி கதாநாயகியாக தற்போது திகழ்ந்து வருகிறார்.
அதுபோலவே தல அஜித் திரை உலகில் எந்த ஒரு பின்னணி இல்லாமல் கடுமையான முயற்சிகளாலும் உழைப்பாலும் எந்த அளவு முன்னேறி இன்று தனக்கு என்று ஒரு ரசிகர் படையை வைத்திருப்பவர்.
அஜித்துடன் நடிக்க நீ, நான் என்று பல நடிகைகள் போட்டி போட்டு இருக்க கூடிய வேளையில் நடிகை திரிஷா இதுவரை அஜித்தோடு இணைந்து நான்கு படங்கள் நடித்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் தற்போது விடாமுயற்சி திரைப்படத்திலும் இவர் இணைந்து நடிக்கிறார்.
இதன் மூலம் ஐந்து படங்களில் ஹீரோயினியாக அஜித்தோடு இணைந்த பெருமை இவருக்கு உள்ளது.இந்த சூழ்நிலையில் அஜித்தை பற்றி திரிஷா பழைய வீடியோ ஒன்றை வெளியிட்டு அதை வைரல் ஆக்கிவிட்டார்.
அதில் விஷால் உடன் இருக்கிறார்.
குறிப்பிட்ட சில நடிகர்களை பிடிக்கும் என்று சொல்ல முடியாது. எந்த படத்தில் நடிக்கிறேனோ, அந்த ஹீரோவை தான் நிச்சயம் ரசிப்பதாக அந்த வீடியோவில் தெரிவித்திருக்கிறார்.
மேலும் தனது வாழ்நாள் ஃபேவரைட் நடிகர் யார் என்று கேட்டால் அது அஜித் குமார் தான்.
ஒரே நேரத்தில் மல்டி ரோல் பண்ணக்கூடிய திறமை இவரிடம் உள்ளது என்றும் மிகச் சிறப்பான மனிதராக இருப்பதோடு மட்டுமல்லாமல் குடும்பத்திற்காக மெனக்கிட கூடிய மிக நல்ல மனிதர் எனக் கூறியிருக்கிறார்.
இந்நிலையில் விடாமுயற்சி படத்தில் அஜித்தோடு திரிஷா நடக்கு நடித்து வரக்கூடிய வேளையில், இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த வீடியோவிற்கு அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரிஷா ரசிகர்களும் லைக்குகளை வாரி கொடுத்து இருக்கிறார்கள்.
மேலும் விடாமுயற்சி மாபெரும் வெற்றியைத் தரும் இந்த வெற்றி கூட்டணியின் மூலம் என அவர்களுக்குள் பேசி வருவதோடு மட்டுமல்லாமல் பட்டிமன்றமும் நடத்தி வருகிறார்கள் என கூறலாம்.