யாருக்காக இந்த தியானம்? - தியானக் கோலத்தில் அமலா பால் ஷாக்கில் ரசிகர்கள்..

 

இந்த பூனையும் பால் குடிக்குமா? என்ற வார்த்தைகளை போட்டு கேட்கக்கூடிய அளவிற்கு தற்போது அமலா பால் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து புரட்டாசி மாதத்திற்கு ஏற்றது போல் உள்ளது என்று பலவிதமான கருத்துக்களை ரசிகர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். 

நடிகை அமலாபால் சிந்து சமவெளி, மைனா, வேலையில்லா பட்டதாரி, தெய்வத்திருமகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை பெற்றிருப்பவர். 

இந்நிலையில் சமீப காலமாக இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனதின் காரணத்தால் ஆடை என்ற படத்தில் ஆடை இல்லாமல் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தார். அடுத்து சில பட வாழ்த்துக்கள் இவருக்கு வந்து சேர்ந்தது.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் வெளிநாடு சென்றால் அங்கு எடுக்கக்கூடிய புகைப்படங்களையும் இவரது புகைப்படங்களையும் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி விடுவார். 

அந்த வகையில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் அமலா பால் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படமானது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகிவிட்டது. 


இதற்கு காரணம் என்னவென்றால் இந்தப் புகைப்படங்கள் அனைத்தும் அமலா பால் அமைதியாக அமர்ந்து தியானம் செய்வதுபோல உள்ளதால், அட இது நம்ம அமலாபாலா என்ற கேள்வியை எழுப்பியதோடு, திடீரென இப்படி மாறியதின் காரணம் என்ன என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. 

இந்த புகைப்படத்தையும் விட்டு வைக்காத இவரது ரசிகர்கள் புகைப்படத்திற்கு தேவையான லைக்களை வாரி தந்திருக்கிறார்கள் நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்கு உண்மை என்ன என்பது தெரிந்து விடும்.