திரைத்துறையில் யாரும் ஆரம்ப காலத்தில் ஏற்க மறுக்கும் அம்மா கேரக்டரை "காக்கா முட்டை" படத்தில் ஏற்று நடித்து அசத்திய ஐஸ்வர்யா ராஜேஷ் அண்மையில் தனது சகோதரன் பற்றி ஓப்பனாக ஒரு விஷயத்தை பேசி இருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் மானாட மயிலாட நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் ஆனார்.
இதை அடுத்து மக்கள் மத்தியில் இவருக்கு பேரும் புகழும் கிடைத்தது.
இவர் நடித்த படங்களில் உயர்திரு 420, சட்டப்படி குற்றம் உள்ளிட்ட படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்ததை அடுத்து இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய "அட்டகத்தி" படத்தில் ஒரு சிறிய கேரக்டர் ரோல் செய்தார்.
இதனை அடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்த நிலையில் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், கதை வசனம் இயக்கம் உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
இவரது நடிப்புத் திறனை வெளிப்படுத்தக் கூடிய வகையில் தர்மதுரை, குற்றமே தண்டனை, லட்சுமி, வட சென்னை உள்ளிட்ட படங்கள் இவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது.
இவர் வழக்கமாக கதாநாயகிகள் செய்யக்கூடிய விஷயத்தை செய்யாமல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த சொப்பன சுந்தரி, டிரைவர் ஜமுனா, ஃபர்கானா போன்ற படங்கள் இவர் எதிர்பார்த்த வெற்றியை இவருக்கு தரவில்லை என்று தான் கூற வேண்டும்.
இந்நிலையில் இவரது அண்ணன் மணிகண்டன் பிக் பாஸ் சீசனில் கலந்து கொண்டது அனைவருக்கும் மிக நன்றாக நினைவிருக்கும்.மேலும் இவரது அண்ணன் குறித்த வீடியோவை சமீபத்தில் வெளியிட்டு அவரைப் பற்றிய தகவலை கூறி இருப்பது பலரையும் ஈர்த்துள்ளது.
அந்த வகையில் இவரது அண்ணன் எந்த ஒரு உதவியும் ஐஸ்வர்யாவிடமிருந்து எதிர்பார்க்க மாட்டாராம். திரைத்துறையில் நன்கு சம்பாதிக்கும் தங்கையாக இருந்தாலும் என்னிடம் 10,000 ரூபாய் கூட கேட்க தயங்கக்கூடிய கேரக்டரையை கொண்டவன் தன் அண்ணன் என கூறியிருக்கிறார்.
தனக்காக என தங்கையிடம் எதையும் நேரடியாக கேட்க தயங்கக்கூடிய இந்த அண்ணனுக்கு சப்போர்ட்டாக அவருடைய அம்மாவும் அவனுக்கு பணம் தேவைப்படுகிறது உன்னிடம் கேட்கக் கூச்சப்படுகிறார் என்று கூறுவாராம்.
இப்போது மணிகண்டன் எப்படிப்பட்ட கேரக்டர் கொண்டவர் என்பது தற்போது உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது மேலான ஆதரவை எங்களுக்கு கொடுங்கள்.