நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும். இவர் மலையாள திரைப்பட நடிகையான மஞ்சிமா மோகனை காதலிப்பதாக பல வகைகளில் கிசுகிசுக்கள் வெளிவந்தது.
இதனை அடுத்து இவர்கள் இருவருமே எந்த கிசுகிசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் அமைதி காத்து வந்தார்கள். எனினும் இருவரும் இணைந்து செல்லக்கூடிய நிகழ்வுகளின் போட்டோக்களை பத்திரிக்கையாளர்கள் வெளியிட்டதை அடுத்து இருவருமே தாங்கள் காதலிப்பதை ஒப்புக் கொண்டார்கள்.
இந்நிலையில் கௌதம் கார்த்திக் நடிகை மஞ்சிமா இருவரும் கடந்த ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி தங்களது காதலை டிக்ளர் செய்ததோடு, நெருங்கிய நண்பர்களுடனும் உறவுகளோடும் இணைந்து நவம்பர் 28ஆம் தேதி தங்களது திருமணத்தை முடித்துக் கொண்டார்கள்.
இதை அடுத்து வரிசையாக கிறிஸ்மஸ், பொங்கல் என பல பண்டிகைகளை கொண்டாடி கணவரோடு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டதோடு பத்து தல மற்றும் 1947 போன்ற படங்களில் நடித்த தனது கணவன் கௌதமிக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்களை பதிவிட்டார்.
இந்நிலையில் தற்போது தனது கணவரின் பிறந்த நாளை ஒட்டி ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அந்த பதிவில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பார்ட்னர், நீ என் வலிமையின் தூண், என் நம்பிக்கைக்குரியவன், என் ஆத்ம தோழன், என் இரட்டைச் சுடர் மற்றும் பல.
இந்த வாழ்க்கை பயணத்தில் நான் உன் அருகிலேயே இருப்பேன். உன் கையை இருக்க பிடித்துக் கொண்டு உன்னை ஒருபோதும் விழமாட்டேன் என உறுதியளிக்கிறேன் என்று பதிவிட்டு இருக்க கூடிய பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது.
தற்போது இந்த க்யூட் பதிவை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இருவருக்குமே வாழ்த்துக்களை தெரிவித்து வருவதோடு மட்டுமல்லாமல் இந்த பதிவை தெறிக்க விட்டிருக்கிறார்கள்.