பிரியங்கா மோகன் ஆரம்ப காலத்தில் கன்னட திரைப்படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகம் செய்யப்பட்டார். இதனை அடுத்து இவரது சீரிய நடிப்பை பார்த்து இவருக்கு தமிழ், தெலுங்கு என மற்ற மொழிகளில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.
அந்த வகையில் தெலுங்கில் வெளி வந்த கேங் லீடர் என்ற திரைப்படத்தில் இவர் சிறப்பான முறையில் நடித்ததால் பிரபலம் ஆனார். இதனை அடுத்து இவருக்கு தமிழ் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் தானாக வந்து சேர்ந்தது.
தமிழ் திரை உலகை பொருத்தவரை இவர் சிவ கார்த்திகேயனின் டாக்டர் மற்றும் டான் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் இதயத்தில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இதனை அடுத்து சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து மேலும் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி முன்னணி நாயகிகளின் வரிசையில் ஒருவராக இணைய போட்டியிட்டார்.
தற்போது இவர் தனுசுடன் இணைந்து கேப்டன் மில்லர், பவன் கல்யாண்டன் சேர்ந்து ஓஜி, ஜெயம் ரவியோடு இணைந்து பிரதர் போன்ற படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார்.
இந்நிலையில் பல புதிய பட வாய்ப்புக்களை பெற்று வரும் பிரியங்கா மோகன் பற்றிய அதிகாரப்பூர்வமான திரை அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களின் மனதில் குஷியை ஏற்படுத்தி விட்டது.
இதற்குக் காரணம் விவேக் அத்ரயா இயக்கத்தில் தெலுங்கு நடிகர் நாணி நடிப்பில் உருவாகக்கூடிய அவருடைய நாணி 31 வது திரைப்படத்தில் பிரியங்கா மோகன் தான் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கக்கூடிய அறிவிப்பை அந்த நிறுவனம் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
மேலும் பிரியங்கா மோகன் நாணி நடிப்பில் வெளிவந்த கேங் லீடர் திரைப்படம் மாபெரும் வெற்றியை தந்ததை அடுத்து இந்த ஹிட் ஜோடி மீண்டும் நாணி 31 ல் இணைந்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றிருப்பதோடு, இந்த படத்தின் படப்பிடிப்பு 24ஆம் தேதி முதல் துவங்க உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.