மன்னன் தசரதன் எப்படி தன் மகனைப் பிரிந்த போது புத்திர சோகத்தால் வாடினானோ அதுபோலவே எந்த உலகில் இருக்கும்
அனைத்து ஜீவராசிகளுமே தன் குழந்தைகளை இழக்கும் சோகம் மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
அந்த வகையில் அண்மையில் விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா தற்கொலை செய்து கொண்டு இறந்த செய்தி திரை உலகை மட்டுமல்லாமல் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.
இதனை அடுத்து தற்போது விஜய் ஆண்டனியின் மனைவியான பாத்திமா விஜய் ஆண்டனி தனது மகள் குறித்து நெஞ்சை உலுக்க கூடிய அளவிற்கு பதிவு ஒன்றினை சமூக வலைத்தளத்தில் போட்டு இருக்கிறார்.
மேலும் சினிமா துறையில் எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, ஆரம்ப நாட்களில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்னர் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என்று தன் பன்முக திறமையை வெளிப்படுத்தியவர் விஜய் ஆண்டனி.
இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியான பாத்திமாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு மீரா, லாரா என்ற இரண்டு பெண் குழந்தைகளில் மூத்த பெண்ணான மீரா தான் கடந்த செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி அதிகாலை 3 மணி அளவில் தற்கொலை செய்து கொண்ட தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து 16 வயது நிறைந்த தன் மகளை பறிகொடுத்த கவலையில் விஜய் ஆண்டனியும், அவரது மனைவியும் இருக்கிறார்கள். அந்த நிகழ்வில் இருந்து அவர்கள் இன்னும் மீண்டு வரவில்லை என்று தான் கூற வேண்டும்.
தற்போது விஜய் ஆண்டனியின் மனைவி கண்ணீரை வரவழைக்கக்கூடிய ஒரு பதிவினை சமூக வலைத்தளத்தில் போட்டு இருக்கிறார். அந்த பதிவில் அவர் நீ 16 வருடங்கள் மட்டுமே வாழ்வாய் என்று எனக்குத் தெரிந்திருந்தால் நான் உன்னை எனக்கு மிக அருகிலேயே வைத்திருப்பேன்.
சூரியனுக்கும் சந்திரனுக்கும் கூட உன்னை காட்டி இருக்க மாட்டேன். இப்போது உன் எண்ணங்களில் மூழ்கி இறந்து போகிறேன். நீ இல்லாமல் வாழ முடியாது. அம்மா.. அப்பாவிடம் திரும்பி வா லாரா உனக்காக காத்திருக்கிறேன்.
லவ் யூ தங்கமே என்ற பதிவை பதிவிட்டு இருக்கிறார்.
இந்த பதிவை யார் படித்தாலும் அவர்களது கண்களில் நிச்சயமாக நீர் வரும் இப்படிப்பட்ட புத்திர சோகம் யாருக்குமே ஏற்படக் கூடாது என்று பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வந்தாலும் அந்த இடத்தை பூர்த்தி செய்ய எவராலும் முடியாது என்பது தான் உண்மை.