அண்மையில் தளபதி விஜய் நடிப்பில் வெளி வந்த லியோ படம் கலவை ரீதியான விமர்சனத்தை பெற்று வருகிறது. இதனை அடுத்து தளபதி விஜய் தற்போது தளபதி 68 இல் நடிப்பதற்கு தயாராகிவிட்டார் என்று கூறக்கூடிய அளவு அந்த படத்தின் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனை அடுத்து தளபதியோடு இணைய போகும் நடிகை திரிஷா, பிரியங்கா மோகன் என பல வகைகளில் தகவல்கள் வெளி வந்து ரசிகர்களை திக்கு முக்காட வைத்தது. இதனை அடுத்து இந்த நடிகைகளை ஃபாலோ செய்யக்கூடிய விஜயின் ரசிகர்கள் அதிகரித்தனர்.
அதுமட்டுமல்லாமல் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரிஷா, விஜய் இணைந்து நடிப்பது கில்லி படத்தைப் போல வெற்றியை அதிகரித்துக் கொடுக்கும்.
இவர்கள் கெமிஸ்ட்ரி சூப்பராக வொர்க் அவுட் ஆகும் என்று ரசிகர்கள் நம்பி வந்த நிலையில் தற்போது வெளி வந்திருக்க கூடிய செய்தியை கேட்டு அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
இதற்குக் காரணம் "இந்த படத்தில் நடிக்க தற்போது மீனாக்க்ஷி சவுத்ரி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் என்ற அறிவிப்பு தான் ரசிகர்களின் மனதில் நீ யாரம்மா நீ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
அத்தோடு ரசிகர்கள் நின்றுவிடாமல் மீனாட்சி நடித்த திரைப்படங்களை குறித்த பல தகவல்களை கூகுளில் தேடி வருவதோடு instagramல் இருக்கும் அவரது புகைப்படத்தையும் பார்த்து தற்போது அவரை பாலோ செய்யக்கூடிய நபர்களாக மாறிவிட்டார்கள்.
26 வயது நிரம்பிய பஞ்சாப்பை சேர்ந்த ராணுவ வீரரின் மகள் தான் மீனாட்சி சவுத்ரி இவர் 2017 ஆம் ஆண்டு நடந்த இந்தியன் மிலிட்டரி அகாடமி மிஸ் அலகி போட்டியில் பங்கேற்று டைட்டில் வென்றவர். அதன் பின்னர் ஃபெமினா மிஸ் இந்தியா 2018 பட்டத்தையும் பெற்றிருக்கிறார்.
மேலும் இவர் டோலிவுட்டில் கில்லாடி ஹிட் செகண்ட் கேஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். தமிழில் விஜய் ஆண்டனியின் கொலை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமாக இருக்கிறார்.
இந்நிலையில் இவர் தளபதி 68 இல் ஹீரோயினியாக ஒப்பந்தமாக ஆகி விட்ட நிலையில் ரசிகர்கள் அவருக்கு பெருத்த ஆதரவை கொடுத்ததற்கு அடையாளமாக ஒரு மில்லியன் ரசிகர்கள் அவரை இன்ஸ்டால் பக்கத்தில் ஃபாலோ செய்கிறார்கள்.