அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 7 கலைக்கட்டி வரும் நிலையில் மீ டூ செய்தி ஒன்று வந்து ரசிகர்களின் மனதில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அட ..அப்படி என்ன தான் நடந்தது என்று நீங்கள் யோசிக்கலாம்.
இந்த நிகழ்வானது மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதலாவது சீசனில் போட்டியாளராக களம் இறங்கி பிரபலமான ஷியாஸ் மீது பாலியல் புகார் வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
இந்தப் புகாரை 32 வயதான ஜிம் பயிற்சியாளர் ஒருவர் போலீசில் கொடுத்திருக்கிறார்.
அந்தப் புகாரில் ஷியாஸ் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும் மூணாறில் உள்ள லாட்ஜில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததன் காரணத்தால் கர்ப்பமானதாக கூறியிருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் அவர் கர்ப்பமான விஷயத்தை அறிந்து கொண்ட ஷியாஸ் கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தியதோடு தன்னிடம் இருந்த 11 லட்சம் ரூபாயை மோசடி செய்து கடந்த 2001 முதல் 2023 மார்ச் வரை உறவில் இருந்ததாக கூறி கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறார்.
இதற்கிடையில் ஷியாஸ் வேறொரு பெண்ணோடு நிச்சயதார்த்தம் செய்யப்பட கூடிய நேரத்தில் இந்தப் பெண் போலீசில் புகார் அளித்து இருக்கிறார். இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு வந்த ஷியாஸை, சுங்கத் துறை அதிகாரிகள் விமான நிலையத்திலேயே தடுத்து பாலியல் வன்கொடுமை சட்ட வழக்கில் கைது செய்து இருக்கிறார்கள்.
தற்போது இந்த கைதி நடவடிக்கை ரசிகர்களின் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றால் மிகையாகாது.