நடிகர் சங்க கட்டிடம்லாம் இல்ல.. இதனால் தான் நான் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல..! - விஷால் ஓப்பன் டாக்..!

 

தமிழ் சினிமாவில் தற்போது விஷாலின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. கட்டாய வெற்றியை கொடுத்தால்தான் சினிமாவில் நிலைத்து நிற்க சூழ்நிலைகள் அமையும் என்ற நிலைக்கு தற்போது தள்ளப்பட்டு இருக்கிறார். 

இந்த நிலையில் சமீபகாலமாக அவர் நடித்த படங்கள் எதுவும் பெரிய கிட்டை கொடுக்காத வேளையில் அண்மையில் வெளிவந்திருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படமானது விஷாலின் ரசிகர்களின் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது. 

இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க எஸ் ஜே சூர்யா, சுனில், செல்வராகவன், ரீத்து வர்மா என பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.100 கோடி வரை பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்த இந்த படம் விஷால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் படி ஒரு சூப்பர் டூப்பர் ஹிட்டாக அமைந்துவிட்டது என கூறலாம். 

இதனை அடுத்து அண்மையில் Youtube பேட்டி ஒன்றில் நடிகர் விஷால் பேசிய போது அவரது திருமணம் பற்றி பல்வேறு கருத்துக்கள் எழுப்பப்பட்டது. அந்த கேள்விகளுக்கு பொறுப்புடனும், பொறுமையாகவும் விஷால் பதிலளித்தார். 

மேலும் திருமணம் என்பது ஒரு சாதாரண விஷயம் அல்ல. அதற்கு புரிதலும், பக்குவமும் அவசியம். எடுத்தேன், கவிழ்த்தேன் என்று எதையும் நாம் செய்து விட முடியாது. ஏனெனில் இது ஒரு பெண்ணின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது. 

தற்போது தனக்கு நிறைய பொறுப்புகள் உள்ளதால் அந்த பொறுப்புகளில் இருந்து விடுபடக்கூடிய நேரத்தில் என் வாழ்க்கையிலும் திருமணம் கட்டாயம் நடக்கும் என்று பேசி இருக்கிறார். இந்த பேச்சு தான் தற்போது வைரலாக இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. 

மேலும் சற்றும் தயங்காமல் பதிலளித்த விஷாலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இன்னும் சில ரசிகர்கள் ஒரு படி மேலே சென்று விஷால் மிக நல்ல மனிதர் என்றும் தன்னால் எந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையும் கெட்டுப்போக கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக அவரது பதில் அமைந்துள்ளது என்று கூறி இருக்கிறார்கள். 

இந்த செய்திகள் உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வண்ணத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். உங்களது மேலான கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.