மக்கள் செல்வன் விஜயசேதுபதி தன்னுடைய சுய முயற்சியால் திரையுலகில் அடி எடுத்து வைத்து பல வெற்றி படங்களை கொடுத்தவர். இவரை பற்றி உங்களுக்கு அதிகம் தெரிந்திருக்கும் ஆனால் இவரின் மறுபக்கம் பற்றி உங்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டாமா?
இவர் நடிக்கும் போது இவருடைய காதல் லீலைகள் அப்படியும், இப்படியுமாக வெளிவந்து பேசும் பொருளாக இருந்தது. மேலும் அவரோடு நடித்த சில நடிகைகளுக்கு அவர் மீது அந்த எண்ணம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
அந்த வகையில் முதலாவதாக லக்ஷ்மி மேனன் விஜய் சேதுபதியோடு இணைந்து ரெக்க படத்தில் நடித்த போது அவர்களுக்குள் சம்திங் சம்திங் என்று பேசப்பட்டது. அதுமட்டுமில்லாமல் லக்ஷ்மி மேனனுக்கும் விஜயசேதுபதியை ரொம்ப பிடித்து விட்டதால் அவர் மீது மிகுந்த கிரஷில் இருந்திருக்கிறார்.
அது போலவே நடிகை காயத்ரியும் விஜய சேதுபதியோடு இணைந்து நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்ற படத்தில் நடித்த போது அவர் மீது அதீத காதல் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அதனால் தான் விஜய் சேதுபதி நடிக்கக்கூடிய எல்லா படங்களிலும் முடிந்த அளவுக்கு காயத்ரிக்கு கேரக்டரை வாங்கிக் கொடுத்திருக்கிறார் என்ற கருத்தும் நிலவுகிறது.
காயத்ரியை போலவே ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் நிறைய கேரக்டர் ரோல்களை விஜய சேதுபதி வாங்கி தந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து ஐஸ்வர்யா ராஜேஷின் பேவரைட் லிஸ்டில் இவர் எப்போதும் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
மேலும் விஜய் சேதுபதி ரம்யா நம்பீசனோடு இணைந்து பீசா படத்தில் நடித்திருக்கிறார்.
அதன் பிறகு இருவரும் இணைந்து சேதுபதி படத்திலும் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் அவர்கள் ரொமான்டிக் சீனில் படு நெருக்கமாக நடித்ததன் காரணமே இருவருக்கும் இடையே ஒரு விதமான கெமிஸ்ட்ரி இருந்தது என்று கூறியிருக்கிறார்கள்.
இப்படி விஜய் சேதுபதியின் மீது பல நடிகைகள் மிகுந்த ஈடுபாட்டில் இருப்பதாக தெரியவந்துள்ளது. உங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால் வண்ணத்திரை பக்கத்தை தினமும் பாருங்கள் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.