என்ன சொல்றீங்க கிளாமர் குயின் விசித்ரா டாக்டரா..? - உண்மை இது தான்..!

 


தமிழ் திரை உலகில் 16 வயதிலேயே நடிக்க வந்த விசித்ரா பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வலம் வந்தவர். இதனை அடுத்து இவர் தற்போது பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக பங்கேற்று இருக்கிறார். 

தற்போது திருமணம் ஆகி மூன்று மகன்கள் உள்ள நிலையில் கல்விக்கு வயது தடை இல்லை என்பதை மிகச் சிறப்பாக நிரூபித்திருக்கிறார் என்று கூறலாம். இதனால் தான் இவர் தன்னோடு போட்டியிட்ட சக போட்டியாளரான ஜோவிகாவிடம் கல்வியின் அவசியத்தை பற்றி பேசியதில் எந்த ஆச்சரியமும் இல்லை என்று சொல்லக்கூடிய வகையில் தகுதி வாய்ந்த நபராக இருக்கிறார். 

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் தேவை என்றால் அதற்கு கல்வி முக்கியம். அது சாமானிய மக்களாக இருந்தாலும் சரி, மிகப்பெரிய அளவில் பணத்தால் உயர்ந்து இருக்கும் மனிதராக இருந்தாலும் கல்வி என்பது அந்த மனிதனுக்கு கட்டாயம் தேவை. 

இதனை உறுதி செய்யக்கூடிய வகையில் தான் இவரது செயல் உள்ளது என்று கூறலாம். சினிமாவில் 16வது வயதில் நடிக்க வந்தாலும், கல்வியின் அவசியத்தை புரிந்து இருந்த இவர் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர். 

இதனை அடுத்து தொலைதூரக் கல்வி மூலம் சைக்காலஜி முடித்திருக்கிறார் என்றால் உங்களுக்கு அது ஆச்சரியத்தை நிச்சயம் ஏற்படுத்தும். அத்தோடு நின்று விட்டாரா, திருமணத்திற்குப் பிறகு உளவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றார். தற்போது உளவியல் துறையில் டாக்டரேட் பட்டம் வாங்கியிருக்கிறார் விசித்ரா என்றால் உங்களுக்கு விசித்திரமாக தானே இருக்கும். 

உண்மையில் உளவியல் துறையில் டாக்டரேட் பட்டம் பெற்றிருக்கக் கூடிய இவர், தன் மகன் படித்த பள்ளியிலேயே உளவியல் ஆலோசனையை வழங்கக்கூடிய பணியை மன நிறைவோடு செய்து வருவதாக சமீப பேட்டியில் கூறியிருக்கிறார். 

எப்போது சொல்லுங்கள் இவர் ஜோவிகாவிடம் கல்வியின் அவசியத்தை எடுத்துக் கூறியதில் என்ன தவறு உள்ளது. இதை அடுத்து உளவியலில் இவர் டாக்டரேட் என்பதை அறிந்து கொண்ட ரசிகர்கள் இவருக்கு பாராட்டுகளை குவித்து வருகிறார்கள்.