ஒரு இதயத்தின் உண்மை கதை என்ற பெயரில் வெளிவந்திருக்கும் இந்த புத்தகம் ஸ்ரீபதி பத்மநாபாவின் தமிழ் ஆக்கத்தில் உயிர்மை பதிப்பக வெளியிட்டால் வெளியிடப்பட்டுள்ளது.
கேரளாவில் இருக்கும் மிகப்பெரிய முன்னணி ஹீரோக்களை சினர வைத்து வெளியே ஓட வைக்கும் அளவுக்கு ரசிகர் கூட்டத்தை பெற்ற ஷகீலா சில்க் ஸ்மிதா உடன் இணைந்து நடித்த ப்ளே கேர்ள்ஸ் என்ற படம் பெரிய ஹிட் ஆனதை அவர் எதிர்பார்க்கவில்லை என்று கூறி இருக்கிறார்.
நல்ல படத்தின் வெற்றி காரணமாக தென்னிந்தியா முழுவதும் அறியப்படக்கூடிய இளம் பெண்ணாக நான் இருந்தேன் இவ்வளவு பெரிய வெற்றி எனக்கு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
மேலும் திரை உலகில் நுழையும் போது 17 வயதில் நிரம்பி இருந்தது.
நான் யாரையும் அட்ஜஸ்ட்மென்ட் செய்தோ, காலை பிடித்துதோ திரைஉலகிக்குள் நுழையவில்லை. என் திறமையை நம்பி தான் நான் திரையுலகில் நுழைந்தேன். நான் நடிப்பது எல்லாம் பலான சினிமாவில் தான்.இதில் உடம்பைக் காட்டுவதைத் தவிர இது நடிக்க என்ன உள்ளது என்று பலரும் நினைக்கலாம்.
எனினும் என் அதிர்ஷ்ட சினிமாவில் எனக்கு சில நல்ல விஷயங்கள் நடந்தது ஆனால் சினிமா வாய்ப்புக்காக யாரிடமும் நான் எங்கேயும் இரையாகவில்லை என்பதை தெளிவாக விளக்கியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சினிமாத்துறை பெண்களுக்கு ஆபத்தான துறை ஒருமுறை இதை நுழைந்து விட்டால் வெளியே வர முடியாது.
சினிமாவில் நான் எல்லோரிடமும் நட்பாக தான் பழகுவேன் என்னிடம் மிகுந்த நேசத்தோடு திரைத்துறையினரும் பழகி இருக்கிறார்கள். எந்த ஒரு இடைத்தரகர் மூலமாகவோ நான் நடிக்க கேட்டு போனது இல்லை அப்படியெல்லாம் போய் இருந்தால் கட்டாயம் படுகைக்கு அழைத்து இருப்பார்கள்.
தான் காதலித்த பல பேர் சினிமா துறையைச் சார்ந்தவர்கள் அல்ல சினிமாவோடு அதிகம் தொடர்பு இல்லாதவர்கள் தான் என்ற பல உண்மைகளை அந்த புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.