லியோ படம் வரும் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் அதன் டிரைலர் வெளி வந்து மிகப்பெரிய சாதனையை செய்திருக்கிறது. இதனை அடுத்து இந்தப் படமும் ஒரு படத்தின் காப்பி என்று நெட்டிசன்கள் பலரும் கருத்துக்களை பதிவு செய்த வண்ணம் இருக்கிறார்கள்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள இந்த படம் ரசிகர்களின் மத்தியில் மாபெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. மேலும் விஜக்கு இந்த படம் ஒரு கம்பேக் படமாக அமையும் என்று சொல்லப்படக்கூடிய வேளையில் இதன் படப்பிடிப்பு காஷ்மீர் மற்றும் சென்னை பகுதிகளில் நடந்து முடிந்து உள்ளது.
இந்த திரைப்படத்தில் ரத்தம் தெறிக்கக்கூடிய அதிரடி காட்சிகள் ரசிகர்களின் மனதை தொடும்படி உருவாக்கப்பட்டுள்ளது என்பது இதன் ட்ரைலர் வெளி வந்த உடனேயே ரசிகர்கள் கணித்து விட்டார்கள்.
மேலும் விஜய் இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடித்திருப்பார் என்பது அவர்களின் வியூகமாக உள்ளது.
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு இது கிட்டத்தட்ட ஹிஸ்டரி ஆப் வைலன்ஸ் என்ற படத்தின் காப்பியாக உள்ளது என சில ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.
அட்லியைப் போல லோகேஷ் கனகராஜ் ஹாலிவுட் படங்களை அதிகம் பார்ப்பார் என்பதால் அந்த படத்தின் சாயல் இதில் உள்ளது என்று ஆணித்தரமாக கூறியிருக்கிறார்கள்.
மேலும் இந்த படம் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள திரைப்படமான Aparan திரைப்படத்தைப் போல் உள்ளதாகவும், ஆக மொத்தத்தில் இந்த இரண்டு படங்களின் கலவையாகத்தான் லியோ அமைந்துள்ளது என்பதை கூறி நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் லியோவின் Badaas பாடலுக்கு ரசிகர்கள் பெருத்த ஆதரவையும் வரவேற்பையும் தந்துள்ள நிலையில் இப்படி ஒரு காபி படமாக இருக்கும் என்பதை அவர்கள் ட்ரைலரைப் பார்த்தே கண்டுபிடித்து விட்டார்கள்.
மேலும் எந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கிறார். லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த், மிஸ்கின், மன்சூர் அலிகான் போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்து இருக்கக்கூடிய வேளையில் படம் வெளியான பின்பு தான் இந்த படத்தின் தரம் எப்படி என்பதை நாம் நிர்ணயிக்க முடியும்.