நடிகை ரஞ்சிதா என்ன ஆனார்..? - தற்போது அவருடைய நிலை என்னன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

 


நித்யானந்தாவை பற்றி எவரும் மறந்திருக்க மாட்டீர்கள். சோசியல் மீடியாக்களுக்கு நித்தியானந்தா என்றால் உயிர் எனக் கூறலாம். ஏனெனில் சோசியல் மீடியாக்களை தீனி போட்டு வளர்த்ததில் இவரது பங்கும் உண்டு. உல்லாச சாமியாராக சித்தரிக்கப்பட்ட இவரது மடத்தில் எண்ணற்ற இளம் பெண்கள் அதுவும் படித்த பெண்கள் பலரும் இணைந்து பல வகையான சேவைகளை செய்ததாக கூறியிருக்கிறார்கள். 

இந்த நிலையில் இவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இந்தியாவே வேண்டாம் என்று கைலாசா என்ற தீவுக்கு சென்று அங்கு ஆட்சி செய்து வருவதாக பிரகடனப்படுத்தியதோடு அந்த நாட்டை புது நாடு என கூறிக் கொண்டார்கள். 

இதையெல்லாம் கேட்டும் கேட்காதது போல சகித்து வந்த பொதுமக்கள் தற்போது அந்த கைலாசாவின் பிரதமர் ரஞ்சிதா என்று கூறியதை அடுத்து பொங்கி எழுந்திருக்கிறார்கள். 

அட.. இதெல்லாம் ஒரு பொழப்பா? என்று புலம்பி நிற்பதோடு அந்தப் பதவி ஏன் நித்திக்கு கிடைக்கவில்லை, எப்படி ரஞ்சிதாவிற்கு கிடைத்தது குருவை மிஞ்சிய சிசையாக மாறிவிட்டாரா? அல்லது ஒட்டுமொத்த பவரும் ரஞ்சிதாவின் பக்கம் வந்து விட்டதா? என பல்வேறு வகையான கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள். 

இந்நிலையில் அங்கு இருக்கக்கூடிய சீடர்களில் சில தற்போது போர் கொடி தூக்கி இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. நித்திக்கு பணி விடை செய்த ரஞ்சிதா எப்படி பிரதமர் ஆகலாம் என்ற சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் அங்கிருக்கும் சீடர்கள் இரு பிரிவாகப் பிரிந்து நித்திக்கு சில பேர் ஆதரவையும், சில பேர் ரஞ்சிதாவிற்கு ஆதரவையும் கொடுத்து குழப்பமான சூழ்நிலையை உருவாக்கியதால் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் நித்தியானந்தா திணறி வருகிறார். 

மேலும் சில நாட்களுக்கு முன் நித்திக்கு உடல்நிலை சரியில்லை என்றும், உயிரோடு இருக்கிறாரா? என்ற விஷயமே தெரியாத நிலையில் தற்போது இப்படிப்பட்ட ஒரு விஷயம் கசிந்து இருப்பது ட்ரெண்டிங் ஆகிவிட்டது என கூறலாம்.

இதை எடுத்து உங்களுக்கு என்ன தோன்றுகிறது. கைலாசவுக்கு யார் பிரதமர் ஆகக்கூடிய தகுதி உள்ளது என நீங்கள் கூற விரும்பினால் கமெண்ட் பாக்ஸில் உங்களது கருத்தை பதிவு செய்யுங்கள்.