என்னய்யா சொல்றீங்க ஜவான் படத்துல முதல் ஹீரோயினியாக நடிக்க இருந்தது இவர் தான் அப்படிங்கிற பேச்சு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காரணம் நம் அட்லியின் பரபரப்பான பேச்சு தான் என கூறுகிறார்கள்.
சுமார் 50 நாட்களுக்கு முன்பு ஜவான் திரைப்படம் ரிலீஸ் ஆகி சுமார் 1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்து இருப்பதோடு நயன்தாராவிற்கு பாலிவுட் திரைப்படத்திலும் மிகப்பெரிய வரவேற்பு இந்த படம் பெற்றுத் தந்துள்ளது என கூறலாம்.
இதுவரை தமிழ் திரையுலகில் கலக்கி வந்த இயக்குனர் அட்லி ஜவான் திரைப்படம் மூலம் பாலிவுட் சென்று கலக்கி இருக்கிறார், முதல் படமே இவருக்கு வெற்றி படமாக அமைந்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என கூறலாம்.
இவரை நம்பிய ஷாருக்கான் இந்த படத்தில் மிகச் சிறப்பான முறையில் கம்பேக் கொடுத்திருக்கிறார் என கூறலாம்.
இந்நிலையில் இந்த படம் வெற்றி படமாக அமைந்துவிட்ட நிலையில் ஹீரோயினி தேர்வு கொடுத்து முதல் முதலாக சில கருத்துக்கள் வெளிவந்துள்ளது.
அந்த வகையில் ஜவான் படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடிக்குமாறு 2019 ஆம் ஆண்டு சமந்தா விடம் அட்லி கேட்டிருக்கிறார்.
ஆனால் எதிர்பாராத வகையில் அவர் தனிப்பட்ட வாழ்க்கையில் படு பிஸியாக இருந்த காரணத்தால் ஜவான் படத்தில் நடிக்க சமந்தா மறுத்துவிட்டார்.
அதன் பிறகு நர்மதா கேரக்டரில் நடிக்க நயன்தாராவை அட்லி அணுகி இருக்கிறார், என்ற தகவலை தற்போது கோலிவுட் வட்டாரம் பேசி வருகிறது.
ஆனால் இந்த தகவல் உண்மையானதா? என்பது உறுதி செய்யப்படாத நிலையில் முதல் படமான ராஜா ராணி திரைப்படத்தில் அட்லியின் முதல் ஹீரோயினியாக நடித்தவர் நயன்தாரா.
அந்த படம் மாபெரும் ஹிட்டை அட்லிக்கு கொடுத்ததை அடுத்து பாலிவுட் களம் இறங்கி இவர் அந்த சென்டிமென்ட் கண்டிப்பாக ஒர்க் அவுட் ஆகும் என நினைத்து தான் நயன்தாராவுக்கு வாய்ப்பை தந்திருப்பார் என்ற ரீதியில் ரசிகர்கள் கருதி இருக்க, தற்போது இந்த செய்தி வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் சற்று சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த தகவல் உண்மையானதா என்பதை அட்லி உறுதி செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் பருவம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். எனவே மிக விரைவில் இந்த கருத்துக்கு அட்லி தன்னுடைய கருத்தை கூறுவார்.