லால் சலாம்..! தட்டி தூக்கிய ரெட் ஜெயன்ட்..! - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ரியாகஷனை பாருங்க..!

 


ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் லால் சலாம் திரைப்படம் பொங்கல் அன்று திரையரங்குகளில் ரசிகர்களுக்கு விருந்தாக கூடிய நிலையில் உள்ளது. 

கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் எந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். 

அது மட்டுமல்லாமல் தலைவர் ரஜினிகாந்த் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருப்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். அந்த ரோலின் பெயர் தான் மொய்தீன் பாய். இந்த திரைப்படத்தை லைக் நிறுவனம் தயாரிக்க படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து.

அதன் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து இந்த படம் பற்றிய அப்டேட்டுகள் அடிக்கடி வெளி வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகின்ற உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. 

 இந்த சூழ்நிலையில் பட குழுவானது தற்போது பொங்கலன்று வெளிவரக்கூடிய லால் சலாம் போஸ்டரை பகிர்ந்துள்ளது. மேலும் ரெட் ஜெய்ன்ட் மூவி வெளியிட்டு உரிமையை கைப்பற்றியதையும், இது தெளிவாக விளக்கியுள்ளது. 

எனவே வரும் பொங்கல் தினத்தில் வெளியாக கூடிய எந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு அனைவரும் தயாராகி வருகிறார்கள். மொய்தீன் பாய் என்ற லீடிங் ரோட்டில் நடித்திருக்கும் ரஜினியின் நடிப்பை பார்க்க அவரது ரசிகர்கள் அனைவரும் ஆவலாக காத்திருக்கிறார்கள். 

மகளின் இயக்கத்தில் அப்பாவின் கெஸ்ட் ரோல் எப்படி இருக்கும் என்பது பொங்கல் அன்று தெரிந்துவிடும். இதனை அடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உதயநிதியின் கூட்டணி வெற்றி பெற்று வசூலில் சாதனை புரியுமா என்பதை பற்றி ரசிகர்கள் தற்போது பேசி வருகிறார்கள்.