திரை உலகில் இழுத்துப் போட்டி டீசன்டாக நடித்த நடிகைகளில் ஒருவர் தான் நதியா. இவரது டிரஸ் கோட் பார்ப்பதற்கு ரசிக்கக் கூடிய வகையில் கவர்ச்சி இல்லாமல் அமைந்திருக்கும்.
தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகர்களோடு நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.
தற்போதும் இவர் இளமையோடு காட்சி அளிப்பதை பார்த்து பலரும் அந்த பிட்னஸ் இன் ரகசியம் என்ன என்பதை கேட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் தற்போது அளித்த பேட்டி ஒன்றில் தனது கணவர் பற்றிய சுவாரசியமான விஷயத்தை பகிர்ந்திருக்கிறார்.
அந்த விஷயத்தை கேட்டால் நீங்கள் மிகவும் ஆச்சரியப்படுவீர்கள். இதற்கு காரணம் இவருடைய கணவர் இவர் பக்கத்து வீட்டுக்காரர் என்பதுதான் மேலும் பக்கத்து வீட்டுக்காரராக இருந்த இவரை இவர் காதலித்து இருக்கிறார்.
ஆரம்பத்தில் நட்புடன் ஆரம்பித்த இவரது பழக்கம் பின்னாளில் காதலாக மாறியதாம்.
திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததின் காரணத்தால் அதில் கவனத்தை செலுத்தி வந்த இவர் அன்றைய காலத்தில் மொபைல் போன்கள் இல்லாத போது லெட்டர் எழுதி தனது காதலை வெளிப்படுத்தியவர்.
அப்படி லெட்டர் எழுதி அனுப்பும்போது அந்த லெட்டர் என் அம்மா கையில் கிடைத்துவிட்டது.
இதனை அடுத்து அவருக்கு படித்து நல்ல வேலை கிடைத்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொல்லி எனது அம்மா அனுப்பி வைத்து விட்டார்.
சினிமாவில் பிஸியாக இருந்த என்னால் குடும்பத்தை நடத்த முடியுமா? என்று காதலித்த அவரே கேட்டார்.
வேற்று மதத்தைச் சார்ந்தவர் என்றாலும் விரும்பி திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் திருமணம் செய்த சமயத்தில் கையில் காசே இல்லை.
எனினும் நம்பிக்கையோடு அவரை திருமணம் செய்து கொண்டதை அடுத்து இன்று வரை என் வாழ்க்கை சிறப்பாக செல்கிறது எனக்கு உற்ற துணையாக அவர் திகழ்கிறார் என்ற உண்மையைத்தான் போட்டு உடைத்தார்.