விடாமுயற்சி படத்தில் இருந்து திடீரென விலகிய நடிகை..! இதுதான் காரணமா?

 


தமிழ் சினிமாவில் எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் தானாகவே முயற்சி செய்து, தன்னுடைய கடுமையான உழைப்பால் தனக்கு என்று அசைக்க முடியாத இடத்தை பிடித்திருக்கும் தல அஜித் பற்றி அதிகம் பகிர வேண்டிய அவசியம் இல்லை. 

பேசாமல் காயை நகர்த்தி பெருவாரியான வெற்றியை தக்க வைத்துக் கொள்ளக்கூடிய தன்மை கொண்ட அஜித் தற்போது தன்னுடைய 62 ஆவது படமான விடா முயற்சி படத்தில் கவனத்தோடு நடித்து வருகிறார். இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க, மகிழ் திருமேனி அவர்கள் இயக்கி வருகிறார். 

அதுமட்டுமல்லாமல் வழக்கம்போல் இசையை அனிருத் அமைக்க இந்த படத்தின் அறிவிப்பு வெளி வந்த பிறகு தற்போது தான் ஷூட்டிங் துவங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அஜித் ரசிகர்களால் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டு இருக்கக்கூடிய இந்தப் படம் மிகச் சிறப்பான முறையில் இருக்கும் என்று நம்பப்படுகிறது. 

இந்நிலையில் தற்போது இந்த படத்திற்கான ஷூட்டிங் அஸர்பைஜான் நாட்டுக்கு அருகே இருக்கக்கூடிய பகுதியில் நடந்து வருவதாக சொல்லப்பட்டு வருகிறது. மேலும் இந்த படத்தில் நடிக்கக்கூடிய நடிகை, இந்த படத்தை நடிக்காமல் விலகி இருக்கக்கூடிய தகவல் தற்போது வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இந்தப் படத்தில் நடிகை திரிஷா நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் மற்றொரு கதாநாயகியாக ஏற்கனவே நடிப்பார் என்று அறிவிக்கப்பட்ட பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி தற்போது இந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டார் என்ற செய்தி வந்துள்ளது. 

மேலும் அந்த இடத்தில் அவருக்கு பதிலாக ரெஜினா கஸாண்ட்ரா நடிக்க உள்ளதாக ஒப்பந்தம் ஆகியுள்ள தகவல்கள் வெளிவர ஆரம்பித்துவிட்டது. என்ன காரணத்தினால் பாலிவுட் நடிகை அஜித் திரைப்படத்தில் நடிக்காமல் விலகினார் என்ற கருத்து இன்றுவரை புரியாத புதிராகவே உள்ளது. 

எனினும் விரைவில் திரைக்கு வர இருக்கக்கூடிய அஜித்தின் இந்த படத்தை காண அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் காத்திருக்கிறார்கள் என கூறலாம்.